அவர் மட்டும் சென்னைக்கு பேருந்தை ஓட்டி சென்றிருந்தால்?- காப்பாற்றிய போலீஸார்...அதிர்ச்சியில் நாகர் கோயில் பயணிகள்
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை போதையில் இயக்கிய டிரைவரை போலீசார் மடக்கி அபராதம் விதித்தனர். மாற்று டிரைவர் மூலம் பஸ் புறப்பட்டு சென்றது.
நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் ஆரல்வாய்மொழி - நாக்கால்மடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அனைவரிடமும் ப்ரீத் அனலைசர் (சுவாச பரிசோதனை கருவி) டிடி டெஸ்ட் நடந்தது. இதில் குடிபோதையில் இருந்தவர்கள் சிக்கினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்கள், அரசு பஸ் டிரைவர்களிடமும் சோதனை நடந்தது. அப்போது அவ்வழியாக நாகர்கோயிலிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்து வந்தது. எதற்கு சோதனை செய்வோம் என போலீஸார் அவரிடமும் சோதனை செய்தனர். அப்போது அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அய்யப்பனிடம் நடந்த சோதனையில் அவர் மது போதையில் பஸ்சை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அடப்பாவி மனுஷா போதையில் பக்கத்து ஊருக்கு போவதே சிரமம் இதில் நீர் 500 கி.மீ தூரத்திற்கு 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுபோதையில் போகிறாயா என கடிந்துக்கொண்ட போலீஸார் அவரை வாகனத்தை விட்டு கீழே இறக்கினர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநர் போதையில் பேருந்தை இயக்கிய தகவலை கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் கோபப்பட்டு திட்டினர். இதையடுத்து மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு அந்த பஸ் புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மேற்படி டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினரால் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறினர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், அதிகாரிகள் கூறி உள்ளனர். இனி கட்டாயம் மது அருந்தாத ஓட்டுநர்களையே சோதனை செய்து அனுப்ப உள்ளதாக அரசு அதிகாரிகளிடம் போலீஸார் உறுதிமொழி வாங்கி அனுப்பி அவைத்தனர்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி முதல்வரே… அமெரிக்காவுக்கும் - பஞ்சாபிற்கும் வேறுபாட்டை பார்..! பாடம் எடுத்த பாஜக..!