தங்கை கணவருடன் உல்லாசம்.. அக்காவை கொலை செய்ய திட்டம்.. மகன்களுடன் எக்சிகியூட் செய்த தங்கை..!
தங்கையின் கணவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்த அக்காவை, தங்கை அவரது இரு மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சோழதரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த பெண்ணின் தங்கை புவனகிரி பகுதியில் கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனித்து வசித்து வந்த பெண்ணிற்கு அவரது தங்கையை கணவர் அவ்வப்போது சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் மீறிய உறவாக நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வேலையில் தங்கையின் கணவர் அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு மகன்களுடன் தங்கை விரைந்துள்ளார். அப்போது மனைவி மற்றும் மகன்கள் வருவதை அறிந்த கணவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். மேலும் தப்பி ஓட முயன்ற அக்காவையும் தங்கை மற்றும் அவரது மகன்கள் இரு மகன்களும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தாயக்கு பயந்து தற்கொலை.. 5ஆம் வகுப்பு மாணவி விபரீதம்.. கதறி துடித்த பெற்றோர்...
மேலும் நீ உயிரோடு இருந்தால் தானே எனது கணவருடன் தொடர்பு இருப்பாய் எனக் கூறி சகோதரிகள் இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது தங்கை அவரது இரு மகன்களுடன் சேர்ந்து சேலையால் அக்காவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கொலை செய்த தாய் மற்றும் இரு மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சம்பவமா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சொத்து தகராறில் அரங்கேறிய பயங்கரம்.. தந்தையை வெட்டி படுகொலை செய்த மகன்