×
 

இனியும் பொறுக்க முடியாது... நடுரோட்டில் அமர்ந்த பெண் கவுன்சிலர்கள்... அதிர்த்து போன கடலூர்...!

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான்கு பெண் கவுன்சிலர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான்கு பெண் கவுன்சிலர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக தேமுதிக, பாமக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தியும் யாரும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த 4 பெண் கவுன்சிலர்களும், சென்னை பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: ‘புதுவிதமான மனிதநேயமற்ற தண்டனைகள்’... பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் போலீஸார்..!

முறையான அறிவிப்பு இல்லாமல் மன்ற கூட்டம் நடத்தப்பட்டதாகவும், மின் தகன மேடையை முழுமையாக கட்டி முடிக்காததை கண்டித்தும், ஆக்கிரமிப்பில் இருக்கும் இடத்தை அகற்றி சிமெண்ட் சாலை மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைத்து தர வேண்டும், வணிக வளாகம் கட்டுவதற்கு ஓராண்டுகளுக்கு மேலாகியும் வணிக வளாகம் கட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பெண் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பெண் கவுன்சிலர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். 
 

இதையும் படிங்க: முடிவெட்டியே கின்னஸ் சாதனை.. ஜப்பான் பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share