×
 

ரயிலில் கஞ்சா கடத்தல்.. இளைஞர் துணிகரம்.. சுற்றி வளைத்த போலீசார்..

திண்டுக்கல்லில் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 16 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 

ரயில்களில் அவ்வப்போது கஞ்சா கடத்தல்கள் அதிகரித்து வரும் சூழலை தடுக்கும் விதமாக ரயில்வே எஸ் பி ராஜன் உத்தரவின் பெயரில் போலீசார் ரயிலில் சோதனை நடத்தி வருகின்றனர். என்ன நிலையில் தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவிலிருந்து மதுரை நோக்கி சென்ற வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலில் நேற்று மயிலாடுதுறை சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த ட்ராவல் பையை சோதனை செய்தனர். அதில் இரண்டு பொட்டலங்களில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து செல்வம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்.. அதிரடி காட்டிய போலீசார்..!

போலீசாரின் விசாரணையில் முத்து செல்வம் தெலுங்கானாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் போலீசார் முத்து செல்வத்தை கைது செய்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட முத்து செல்வம் நாகப்பட்டினம் போதை பொருள் நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்.. மடக்கி பிடித்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share