மதுபாட்டில் கடத்திச் சென்ற நபர்.. மடக்கிப்பிடித்து அதிரடி காட்டிய போலீசார்..!
விழுப்புரம் அருகே மது பாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இணங்க மொபட் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபட்டை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பின்பக்கம் இருக்கைக்கு கீழே புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் 88 மது பாட்டில்களை பறிமுதல் செய்த நிலையில் மொபட்டை ஓட்டி சென்ற நபரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை.. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விழுப்புரம் போலீசார் நாகராஜை விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எல்லாமே திமுகவோட தப்பு தான்..! காவல்துறை பணியிட விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!