சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இந்த விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அமலாக்கத்துறையின் மீது முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் நடந்த முறைகேட்டின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததால் தான் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை வாதிட்டது. டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!

லஞ்சம் பெற்ற ஊழியருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்காக தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கே.என்.நேரு வீட்டில் டாஸ்மாக் பணம்..? சிக்கப்போகும் குறுநில மன்னர்கள்- ED வைத்த டார்கெட்..!