அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்க துறையினர் அழைத்துச் சென்று இருக்கின்றனர். இதற்கிடையே பிரிண்டிங் மிஷென் முதல் சூட்கேஸ் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரவிச்சந்திரன் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர்.

ஆனால், ''அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த விவரங்களின்படி, 2013-ல் வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-ல் ஒரு வழக்குப் பதிவு செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் இளைஞர் கொலை.. டாஸ்மாக்கை அடித்து உடைத்த மக்கள்.. குற்றவாளிகள் கைது..!
சுமார் 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியுள்ளது. இந்தச்சோதனை, சிபிஐயால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டதுதானே தவிர, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல'' எனக் கூறுகின்றனர் நேரு தரப்பினர்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் டிடிஎஸ்.ரவி ஒரு யூடியூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''12 வருடத்திற்கு பிறகு சோதனை எதற்காக வந்திருக்கிறது என்றால் டாஸ்மாக் விஷயத்தில் உள்ளே செல்லும்போது... எல்லோரும் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 30 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு கோடி இரண்டு பேரிடம் மட்டுமே செல்கிறது. அப்படியானால் ஒரு நாளுக்கு 10 கோடி ரூபாய் ரெண்டு பேரிடம் மட்டுமே செல்கிறது. இந்த 10 கோடியை அவர்கள் இருவரும் என்ன செய்வார்கள்?

எப்படி எல்லாம் சர்குலேஷனில் விடுவார்கள். பணத்தை மட்டும் யாரும் சும்மா வைத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய பணத்தை ஒவ்வொரு நாளும் இரண்டே இரண்டு பேர் கண்ட்ரோலில் வருகிறது என்றால் அவர்களுக்கு அது சிரமம். ஆர்பிஐ-யால் கூட கையாள முடியாது. இந்தியாவின் நிதி அமைச்சர் கூட இவ்வளவு பெரிய பணத்தை டீல் செய்ய முடியாது. நாமெல்லாம் எண்ணி முடிக்க வேண்டும் என்றாலே இரவு 10 மணிக்கு கண்ணை கட்டிவிடும்.
இதை 12 குறுநில மன்னர்களிடம் வைத்து தான் செயல்படுத்த முடியும். அப்படித்தான் செயல்படுத்தி வருகிறார்கள். அதே போல் இவர்களுக்கு திருப்பி கொடுப்பதும் அந்த 12 குறுநில மன்னர்கள்தான். கனிம வளம் மூலமாகவோ, மணல் மூலமாகவோ, சாராயம் மூலமாகவோ தலைமை குடும்பத்திற்கு கொடுப்பதும் இவர்கள்தான். கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடக்கவில்லை என அதிசயப்படுவதில் ஒன்றுமே இல்லை. அது தடுக்கப்பட்டு இருக்கிறது. தகவல்கள் முதலில் வந்து விடும்.

நமக்கே தெரியும் ஆ.ராசாவின் உடைய திமுக பைல்ஸ் வெளியானபோது, 'நாளைக்கு வருகிறார்கள். இந்த இடங்களுக்கு செல்கிறார்கள்' என்று அவருக்கு சொல்ல கூடிய அளவுக்கு அங்கே சில அல்லக்கைகளை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆகையால் டாஸ்மாக் சாதாரண பணம் இல்லை. மிகப் பெரிய பணம். இவர்களிடம் விளையாடிக் கொண்டிருக்கிறது. டாஸ்மார்க் விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் எப்படி கண்டு பிடித்தார்கள்? இத்தனை பாட்டில், எத்தனை மூடி, எத்தனை ஸ்டிக்கர் என்கிற அடிப்படையில்தான். ஆனால் அத்தனை சரக்குகளும் விற்கப்படவில்லை. அப்படியானால் இது எங்கே போனது? என்று நியாயமாய் கேட்கிறார்கள்.

மணல் விஷயத்தில் இத்தனை லாரி, இத்தனை டோல்கேயட் மூலமாக செல்கிறது. ட்ரோன் மூலமாக பார்த்தல் எத்தனை லாரிகள் அள்ளிக் கொண்டு இருக்கிறது என்பததெரிந்துவிடும். 120 கோடிக்கு விற்றால் கணக்கில் வருவது 60 கோடிதான். துல்லியமாக ஒரு விஷயத்தை பார்க்கும்போது ஒரு ஸ்கூப் கிடைத்தால் ஒரு குறிப்பிட்டவர்களை சந்தேகிப்பதும் அதன் மூலம் மற்றவர்கள் மூச்சு விட்டார்கள் என்றால் அவர்களை பிடிப்பதும் அதன் மூலமாக பதற்றப்பட்டு யாராவது செயல்பட்டால் அவர்களை பிடிப்பது போன்றது தான் அமலாக்கத்துறை சோதனையும். கே.என்.நேருவின் குறுநில மன்னர் என்ற அந்த கெத்துக்கு 22 கோடி 50 கோடி என்பதெல்லாம் பத்து நாள் பிரச்சனை. ஆகையால், டாஸ்மாக் பணம் நேரு குடும்பம் நடத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில்தான் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 25 வயது இளைஞர் துடிதுடிக்க வெட்டிக்கொலை..! டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்..!