மதுரை மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு வளர்க்க 150 ரூபாய் கட்டணம், மாடு வளர்ப்பதற்கு 500 ரூபாய் கட்டணம், பன்றி வளர்க்க 500 ரூபாய் கட்டணம், குதிரை வளர்த்தால் 750 ரூபாய் கட்டணம் என தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு தலா 750 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு விலங்குக்காக, ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தால் (உதாரணத்திற்கு இரண்டு நாய்கள், இரண்டு பூனைகள்) தனித்தனி கட்டணமா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. கிளி, புறா போன்றவைக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாம். தற்போது இவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எப்போது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை. எப்படியாயினும், செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டணமா? என்ற குரல்கள் மதுரையெங்கும் ஒலிக்கிறது.
இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!
இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் உயிரிழந்த வழக்கு... தகுந்த ஆதாரம் இல்லை... உயர்நீதிமன்றம் பதில்..!