×
 

அகோரியாக மாறினார் ! 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்ஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் விதவிதமான ஸ்வரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை அகோரியாக குடும்பத்தினர் கும்பமேளாவில் கண்டுபிடித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் நகரைச் சேர்ந்த கங்காசாகர் யாதவ் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனார். இவரை குடும்பத்தினர் பல இடங்களிலும், நகரங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மகா கும்பமேளாவில் அகோரிகள் சங்கமிக்கும் இடத்தில் அகோரியாக கங்காசாகரை அவரின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். மகா கும்பமேளாவில் கங்காசாகர் போன்று இருந்த அகோரியை  புகைப்படம் எடுத்து, அதை குடும்பத்தினருக்கு உறவினர்கள் சிலர் அனுப்பிவைத்தனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த கங்காசாகர் மனைவி குடும்பத்தினர் அவரின் முன்நெற்றியில் இருந்த தழும்பு, முழங்காலில் இருந்த தழும்புகள், நீண்ட தெத்துப்பல் ஆகியவற்றை பார்த்து அவரை கங்காசாகர் என்று அடையாளம் கண்டனர்.


இதையடுத்து, கங்காசாகர் மனைவி தான்வா தேவி, மகன்கள் கமலேஷ், விமலேஷ், கங்காசாகர் சகோதரர் முரளி யாதவ் ஆகியோர் மகா கும்பமேளா நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
இப்போது கங்காசாகருக்கு 65வயதாகிகிறது. தன்னுடைய பெயரை பாபா ராஜ்குமார் என மாற்றிக்கொண்டு அகோரியாக மாறியுள்ளநிலையில் கடந்தகால வாழ்க்கை குறித்து அவரால் நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. தான் வாரணாசியில் இருந்து வருவதாகவும், கங்காசாகருக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.

அகோரி பாபா ராஜ்குமார் தான் கங்காசாகர் இல்லை என மறுத்தாலும், அவரின் மனைவி, குடும்பத்தினர் பழைய நினைவுகளைக் கூறி அவரின் உண்மையான அடையாளத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து, கும்பமேளாவில் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவித்த குடும்பத்தினர், பாபா ராஜ்குமாரின் டிஎன்ஏ-வை பரிசோதனை செய்து தங்களின் உறவை நிரூபிக்கக் கோரினர் இது குறித்து கங்கா சாகர் யாதவ் சகோதரர் முரளி யாதவ் கூறுகையில் “ கும்பமேளா முடியும் வரை நாங்கள் காத்திருப்போம். பாபா ராஜ்குமார் டிஎன்ஏ எங்கள் குடும்பத்தினருடன் பொருந்தாவிட்டால் நாங்கள் அவரிடம் மனம் திறந்து மன்னிப்புக் கோருவோம். எங்கள் உறவினர்கள் கும்பமேளாவில் புகைப்படம், வீடியோ எடுத்து கங்கா சாகர் போன்று இருக்கிறார் என்று அனுப்பும்வரை எங்கள் சகோதரரை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கை இத்தனை ஆண்டுகளாக இல்லை. ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கும்பமேளா பியூட்டி' மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு: " இதுதான் என் உலகம்..." டெண்ட் கொட்டாய் வீடு காட்டி வீடியோ போட்டு உருக்கம்..!


இந்த விவகாரத்தில் உ.பி. அரசு தங்களுக்கு உதவ வேண்டும், தன்னுடைய கணவரை மீண்டும் குடும்பத்தாருடன் சேர்த்துவைக்க வேண்டும் என மனைவி தான்வா தேவி தெரிவித்துள்ளார்.
தான்வா தேவி கூறுகைியல் “ 27 ஆண்டுகளுக்கு முன், எங்கள் கிராமத்தில் நாங்கள் எங்களின் இளைய மைத்துனர் திருமணச் சடங்குகள் நடந்தது.  அந்தநேரத்தில் கங்கா சாகர் அங்கிருந்து புறப்பட்டு புடவை வாங்கிவருவதாகக் கூறிச் சென்றார். அதன்பின் வரவே இல்லை. சமீபத்தில் கும்பமேளாவுக்கு சென்ற என்னுடைய உறவினர் கங்கா சாகர் போன்று ஒரு துறவி இருப்பதைபுகைப்படம், வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப் பார்த்த நாங்கள் இது கங்கா சாகராக இருக்கலாம் என நினைத்து உடனடியாக கும்பமேளாவுக்கு வந்தோம், அவரிடம் பேசினோம். ஆனால், எங்களை அவரால் அடையாளம் காணமுடியவில்லை, சொந்த மனைவியைக் கூட அடையாளம் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: 'மகா கும்பமேளா' நெரிசலில் 30 பக்தர்கள் பலி: நடவடிக்கை, வழிகாட்டுதல்கள் கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share