×
 

நான் அப்படி பேசல ..வீடியோ வெட்டி ஒட்டி பரப்புறாங்க..ஆண்ட பரம்பரை பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு ..!

நான் அமைச்சர், அனைவருக்கும், அனைத்து சமூதாய மக்களுக்கும் பொதுவான நபர்.நான் பேசிய குறிப்பிட்ட வீடியோ வெட்டி ஒட்டி பரப்பப்பட்டுள்ளது என ஆண்ட பரம்பரை பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்

ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது , நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிக்கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது என மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளை விழாவில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாக வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். நான் அமைச்சர், அனைவருக்கும், அனைத்து சமூதாய மக்களுக்கும் பொதுவான நபர். நான் அங்கு பேசியதில், ‘நீங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள். தற்போது தான் 450 பேர் படித்து தேர்வாகி வந்திருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் பதவிக்கு வரும்போது, அனைத்து சமூதாய மக்களையும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்’ என்று தான் இருக்கிறது. எனவே அந்தப் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு கேள்வி கேளுங்கள். இதற்கிடையில் வேண்டுமென்றே எடிட் செய்து பரப்பியுள்ளார்கள்.நான் ஆண்ட பரம்பரை என்று சொன்னது, ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து சொன்னேன். ஆனால், இவர்கள் தவறாக எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த சம்பவம்  நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஏதோ நேற்று நடந்ததுபோல் தற்போது மீடியாக்களில் போடுகிறீர்கள். இதற்கு நான் பதில் சொல்லவில்லை. நீங்கள் கேள்வி கேட்பதால் அதற்கான பதிலை மட்டுமே சொல்கிறேன் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share