×
 

சாதி குறித்த பேச்சு: வார்த்தையை திரும்பப் பெற்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

பாஜக எம்பி-யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பதிவிட்ட சாதி ரீதியிலான கருத்திற்கு பல்வேறு எதிர்வினைகள் கிளம்பியதை அடுத்து அவர் அந்த கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.

உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும் என பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பேசியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உயர்சாதி அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவர வேண்டும் அப்போதுதான் சிறப்பாகச் செயல்பட முடியும் என சுரேஷ் கோபி பேசியிருந்தார். டெல்லி சட்டபேரவைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது, 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பியும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று ஈடுபட்டார். இதில் கேரள மக்கள் அதிகம் வாழும், கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் அவர் பிரசாரம் செய்கையில் “  நம்முடைய தேசத்தின் சாபமாக, பழங்குடியினத்தைச் சேராத ஒருவர் அந்தத் துறைக்கு அமைச்சராக முடியாது.

இதையும் படிங்க: “திமுக கொத்தடிமை திருமாவுக்கு எங்களப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு”... கொந்தளித்த ஜெயக்குமார்! 

என்னைப் பொருத்தவரை, என் கனவு என்பது, உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் பழங்குடியின நலத்துறை அமைச்சராகவரவேண்டும், அதேபோல உயர்சாதி அதிகாரமளித்தல் துறை அமைச்சராக ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும்.

பிராமணர் அல்லது நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அப்போதுதான் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். இந்த வேண்டுகோளை பிரதமர் மோடியிடம் வைத்திருந்தேன், சிவில் விமானப் போக்குவரத்து துறை கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. சாதிக்கும், அமைச்சரவை பொறுப்புக்கும் என்னத் தொடர்பு என கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி விமர்சித்தன. இதையடுத்து, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.

அதில் “ உயர் சாதி மக்கள் தாமாக முன்வந்து பழங்குடி மக்களன் பிரச்சினைகள் என்ன என்று தெரிந்து கொண்டு தீர்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உயர்சாதி மக்களின் பிரச்சினைகளைத் தெரி்ந்து கொள்ள வேண்டும்.

நான் நல்ல நோக்கில்தான் பேசினேன். தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு இந்த முறை வந்தால் இருவரின் பிரச்சினைகளையும் இருதரப்பு மக்களும் தெரிந்து கொள்வார்கள். என்னுடைய விளக்கம் சரியில்லா என நினைத்தால், என்னுடைய வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share