×
 

இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில்தான் கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ள எம்.எல்.ஏ.க்கள்... ஆய்வில் திடுக்..!!

தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,123 எம்.எல்.ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், நாடு முழுவதும் 45 சதவீத எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 29 சதவீதம் பேர் மீது அதாவது 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 138 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளம், தெலுங்கானாவில் தலா 69 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. பீஹாரில் 66%, மஹாராஷ்டிராவில் 65% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் 59% எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்தியாவிலேயே பாஜகவுக்கு  1,653 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 39 சதவீதம் பேர், அதாவது 638 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 436 பேர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் உள்ள 646 எம்.எல்.ஏ.க்களில், 339 பேர்  மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 194 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதையும் படிங்க: செவ்வாய் கிரகத்தில் கடற்கரையா.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?



இந்தியாவிலேயே தெலுங்கு தேசம் கட்சியின் 134 எம்.எல்.ஏ.க்களில் 115 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 82 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 230 எம்.எல்.ஏ.க்களில், 95 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 78 பேர் கடுமையான குற்றச்சாட்டுகள். ஆம் ஆத்மி கட்சியின் 123 எம்.எல்.ஏ.க்களில் 69 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 35 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்.

தமிழகத்தை ஆளும் திமுகவில் 132 எம்.எல்.ஏ.க்களில்  98 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 42 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன.

இதையும் படிங்க: உஷார் மக்களே... ஆய்வறிக்கை சொன்ன அதிர்ச்சி தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share