×
 

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் ...நடுங்கிப்போனா நெல்லை வாசிகள்

திருநெல்வேலி டவுனில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருநெல்வேலி டவுனில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருநெல்வேலி டவுன் மாதா பூங்கொடி தெரு பகுதியில் நள்ளிரவில் பயங்கர சட்டத்துடன் பெட்ரோல் குண்டு  வெடித்துள்ளது  .இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது பெட்ரோல் குண்டு வீசியது டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சண்முகராஜா என்பது தெரியவந்தது .இரவோடு இரவாக சண்முகராஜாவை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ஹரிஷ் என்ற வாலிபருடன் தனக்கு தகராறு இருந்ததாகவும் அதனால் மது போதையில் தனது நண்பருடன் வந்து பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார்

ஏற்கனவே திருநெல்வேலியில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதேபோல் மது போதையில் இரு நபர்கள் ஒருவருக்கொருவர் பெட்ரோல் குண்டு  வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் நெல்லையில் நிகழ்ந்த சமயத்தில் தற்போது மூன்றாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இதையும் படிங்க: 8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

இதையும் படிங்க: அப்பா ஓடிடு ..அம்மா குத்த போறாங்க .. கணவரின் முதுகில் கத்தியை சொருகிய மனைவி ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share