ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை..அவமதிப்பது தவறு ..குட்டு வைத்த சபாநாயகர் அப்பாவு ..!
சட்டமன்றத்தில் ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை என்று நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் பேசி இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு
தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையை முன்வைத்து புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றாமல் ,ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேறியதால் அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார் சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் எத்தனை நாள் நடைபெறும் என்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் கூடியது நாளை மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறும் முதல் மூன்று நாட்கள் கேள்வி நேரம் இருக்கும் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ,அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளுடன் அவைக்குள் வந்தார்கள். நானோ, முதல்வரோ பேச முயற்சிக்கும் போது அமைதியாகதான் இருந்தார்கள். பல்கலைக் கழகத்தின் வேந்தரான, தற்போதைய ஆளுநர் பேசத் தொடங்கும்போதுதான் அவர்கள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஏதோ கலவர நோக்கத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டோம் என்றார் .
171 சட்டப்பிரிவின் படி ஆளுநர் கண்டிப்பாக சட்டமன்ற உரையை நிகழ்த்த வேண்டும். அரசியலைப்பிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவது தொடர்ந்து வருகிறது ,ஜனநாயக கடமையை மூன்றாவது முறையாக மீறியிருக்கிறார் என்று குற்றம்சாட்டிய அப்பாவு, மதராஸ் பிரிடென்ஸியின் மரபின்படிதான் சட்டப் பேரவை நடந்து வருகிறது. எந்த ஆளுநரும் இதை மீறவில்லை. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான் அவையில் கருத்து சொல்ல உரிமை உண்டு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அழைப்பு கொடுக்க சென்றபோதுகூட நன்கு உபரித்து, மகிழ்ச்சியாக உரையாற்றினோம். தெலங்கானாவில் தமிழிசையை சட்டமன்றக் கூட்டத்தொடருக்கே அழைக்கவில்லை. அப்படியும் சட்டமன்றம் நடக்கதானே செய்தது. இந்தியாவின் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலத்திலாவது இதுபோன்ற சிக்கல் இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்
இதையும் படிங்க: கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!