×
 

அதிமுக ஆட்சி வேணும்னா அணிகள் இணையணும்... ஓயாமல் வலியுறுத்தும் ஓ.பன்னீர்செல்வம்..!

விஜய் இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களின் தீர்ப்புக்குப் பின்னர்தான், அவரது கட்சி பற்றி கருத்துகூற முடியும்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. ஆனால், அதிமுகவில் பிரிந்தவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையவும் அதிமுக ஒன்றுபடவும் வலியுறுத்தி வருகின்றனர். அணிகள் இணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திராவிட இயக்க வரலாற்றில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து நான் தமிழக முதல்வராக இருந்தபோதும் இருமொழிக் கொள்கைதான் தேவை எனத் தீர்மானமே நிறைவேற்றினோம்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும். வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்று கேட்கிறீர்கள். அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை
அதிமுக தொண்டர்கள் ஒருவரும் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள்.

நடிகர் விஜய் இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, மக்கள் தீர்ப்பையும் அவர் பெறவில்லை. எனவே, மக்களின் தீர்ப்புக்குப் பின்னர்தான், அவரது கட்சி பற்றி கருத்துகூற முடியும்." என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்காக ஒட்டப்பட்ட திடீர் போஸ்டர்கள்… கலகலத்துப்போன எடப்பாடி பழனிசாமி அணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share