×
 

சென்னை மக்களே உஷார்.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து.. டெலிவரி பாய் போல் வீடு புகுந்து துணிகரம்..!

சென்னை வளசரவாக்கம் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை டெலிவரி செய்வது போல் வந்து கத்தியை காட்டி திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்மணி. வயது 65. இவர் செவிலியர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். வளசரவாகத்திலேயே தற்போது  தனது மகள், மருமகன் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டின் காலிங் பெல் அடித்துள்ளது. திறந்து பார்த்த போது, டிப்டாக்காக டிரஸ் செய்து கொண்டு ஆசாமி ஒருவர் நின்றுள்ளார். அந்த நபர் ஆன்லைனில் மருந்துகள் ஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய வந்துள்ளதாக கூறி உள்ளார். தனக்காக தனது மகள் தான் மருந்துகளை வந்துள்ளதாக கூறியுள்ளார் அதனையடுத்து தனது மகள் ஆர்டர் செய்திருப்பார் என நினைத்து அவரை உள்ளே அனுமதித்துள்ளார் அந்த பெண்மணி.

உள்ளே வந்த அந்த ஆசாமியோ மருந்துகளை எடுத்து கொடுப்பது போல், தனது பைக்குள் கை விட்டு துளாவி, ஒரு கத்தியை எடுத்துள்ளான். அந்த பெண்மணி சுதாகரிப்பதற்குள் அவரது கையில் குத்தி கிழித்துள்ளான் அந்த ஆசாமி. வலியால் அந்த பெண்மணி அலறி துடிக்கவே, சப்தம் போட்டால் கழுத்தை அறுத்து கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளான். வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கேட்டு அந்த ஆசாமி தொடர்ந்து மிரட்டி உள்ளான். இதனை கண்ட அவரது வீட்டின் பணி புரியும் வேலைக்கார பெண் திருடன் , திருடன்  என கூச்சலிட்டு கத்தி உள்ளார்.

இதையும் படிங்க: சீமான் தம்பிகளால் ஸ்தம்பித்த வளசரவாக்கம்... காவல்நிலையம் முன்பு மாபெரும் போராட்டம்...!

வீட்டில் மற்றொரு ஆள் இருப்பார்கள் என்பதை அறியாத திருடனோ, இன்னும் சற்று நேரம் இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என சுதாகரித்து அங்கிருந்து தப்பி உள்ளான். பதற்றம் தணிந்ததும் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் விசாரணையை துவங்கினர். 

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்த பெண்மணி குறிப்பிட்ட அடையாளங்களோடு சுற்றித்திரிந்தவர்கள் விவரங்களை சேகரிக்க துவங்கினர். அந்த பெண்மணி அளித்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக  ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் ரெப்  நாகமுத்து (வயது 41)என்பவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைனில் மருந்து  டெலிவரி செய்வது போல வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் தாக்கி பணம் மற்றும் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை.. பெல்ட்டால் அடித்து கொன்ற மகன்.. தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share