உத்தரப்பிரேதசத்தில் 45 நாட்கள் கும்பமேளா விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றனர். இதனிடையே அந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்து வந்த பெண் மோனலிசா. 17 வயதான இந்த பெண்ணின் முகம் பலரது கவனத்தை ஈர்த்தது. பலர் அவரது புகைப்படங்களை இணையத்தில் பரப்பினர். இதன் மூலம் அவர் ஒரே நாளில் பேமஸ் ஆனார். இதை அடுத்து அவர் மீடியாக்கள் கண்ணிலும் பட்டார். இதன் மூலம் அவர் மிக பிரபலமடைந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதை அடுத்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அவரது வீடியோக்கள் பதிவேற்றினார். இதனிடையே டைரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு தருவதாக கூறி இயக்குனர் சனோஜ் மிஸ்ரா முன்பணமாக ரூ.25 லட்சத்தை மோனலிசாவிடம் வழங்கினார். இந்த நிலையில், மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சனோஜ் மிஸ்ரா பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பமேளா நீர் குளியலுக்கு அருமையான தண்ணீர்..! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிக்கை

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க தடை விதித்துள்ளது. மேலும் இதுக்குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2020ஆம் ஆண்டில் சமூக வலைதளத்தில் என் வீடியோவை பார்த்த சனோஜ் மிஸ்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2021ஆம் ஆண்டு ரயில்வே நிலையத்திற்கு வர கட்டாயப்படுத்தினார். வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறி மிரட்டினார்.

பின்னர் வசதியான ரிசார்ட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டும் இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை தொல்லை அளித்தார். பின்னர் எண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மும்பையில் என்னுடன் லிவிங் உறவில் வாழவும் என்னை கட்டாயப்படுத்தினார். மேலும், 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். சனோஜ் மிஸ்ரா என்னை மிரட்டி வெளியை விரட்டினார். மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அறிவித்த பின்னர் தான் தெரிந்தது நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். இதற்கு பின் தான் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆச்சரியம்… கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த ஒரே குடும்பம்… ஒரே திருவிழா- ஓஹோ வாழ்க்கை..!