தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அப்போது அவர் பேசிய விதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி தொகுதியுடைய மாப்பிள்ளை, வேளாண்மை துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியுடைய மாப்பிள்ளை, போக்குவரத்துத்துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியின் மாப்பிள்ளை. இவ்வளவு பேர் இருந்தும் சீர்காழி தொகுதியில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்னை என்ன சொல்வார்கள். விரைவாக முதல்வருடைய கவனத்திற்கு எடுத்து சென்று புதிய தொழில் பயிற்சி மையம் துவங்குவதற்குரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரம்... நாளை சட்டப்பேரவையில் தனி தீர்மானம்!!

சீர்காழி தொகுதி என்பது ஒரு பெரிய அளவிலே வளர்ச்சி பெறாத தொகுதி விவசாய தொழில் மட்டும்தான் . அதை தவிர நிறைய மாணவர்க: படிக்கிறார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படித்து முடித்த உடனேயே சுய தொழில் துவங்க வேண்டும் என்றால் அவசியமான ஒரு தொழில் பயிற்சி நிலையம் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் மறுபரிசலனை செய்து தொழில் பயிற்சி நிலையத்தை புத்தூரிலே அமைத்து கொடுக்க அமைச்சர் முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது ஏழு தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க தற்போது அவசியம் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில், நம்முடைய நிதித்துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் செம்மனார் கோவிலில் புதிய தொழில்பயிற்சி நிலையத்தை இந்த ஆண்டு தொடங்கவுள்ளதாக அறிவித்தார். நம்முடைய சட்டமன்ற உறுப்பினுடைய ஊரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது சீர்காழியில் புதிய தொழில் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!