ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏராளமான பக்தர்களுடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீட்டில் நடைபெற்ற வருகின்றன.
இந்திய - இலங்கை பகுதிக்கு நடுவில் இருப்பதனால் இருநாட்டு பக்தர்களும் ஒன்று இணைந்து இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அந்தோணியார் திருவிழா வருகின்ற மார்ச் 14ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து 97 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டு படகுகளில் 549 பெண்கள் மற்றும் 92 குழந்தைகள் உள்ளிட்ட 3400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ‘வரியைக் குறைப்பதாக அமெரிக்காவிடம் உறுதியளிக்கவில்லை’..! நாடாளுமன்றக் குழுவிடம் வர்த்தகச் செயல் விளக்கம்..!
இந்த நிலையில் பக்தர்கள் செல்லும் படகுகளின் தரம் குறித்து மீன்வளத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று ராமேஸ்வரத்தில் ஆய்வு செய்தனர். முன்னதாக கடல் சீற்றத்தின் காரணமாக படகில் ஏரி ஆய்வு செய்ய இயலவில்லை என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்வு நாளில் தந்தையை பறி கொடுத்த மாணவி.. மனதை கரைக்கும் காட்சிகள்..