திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அடுத்த திருமழிசையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசர் (வயது 25). எபினோசர் மீது நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ரவுடி எபினோசர் மற்றொரு ரவுடி கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசியும், பட்டாக்கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
2023ம் ஆண்டு செப்டம்பரில் சொந்த வேலைக்காக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வரை சென்று விட்டு ஆட்டோவில் சென்னையை நோக்கி பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலை வழியாக எபினேசர் வந்துள்ளார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதிக்குள் வந்தபோது எதிர் திசையில் வந்த கார் ஒன்று இவர் வந்த ஆட்டோ மீது மோதியது.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை ஆட்டோவை நோக்கி வீசியது. பின்பு தான் தெரிந்தது இது எபினேசருக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்பது. பின்னர் சுதாரித்துக் கொண்ட எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிய போது அவரை விரட்டிச் சென்ற அந்த கும்பல் கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீஸார் உயிரிழந்த கிடந்த ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..!

மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடினர். அதன் பின்னர் இந்த வழக்கில் ரவுடி வெங்கத்தூர் அன்பு உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். சில காலம் ஜெயிலில் இருந்த வெங்கத்தூர் அன்பு, அதன் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
தங்களது கூட்டாளியை கொன்ற அன்பு, சுதந்திரமாக வெளியில் நடமாடுவதை எபினேசரின் கூட்டாளிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் எபியின் கூட்டாளிகள் ரவுடி அன்பை பழிதீர்க்க காத்திருந்தனர். அதற்கான சமயம் வரும் என எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தான், நேற்று ரவுடி அன்பு மாங்காடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வருவதாக எபியின் கூட்டாளிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனால் ரவுடி அன்புவை மாங்காடு பகுதியிலே வைத்து கொலை செய்ய எபினேசரின் கூட்டாளிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அன்பு அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. ஏதோ காரணங்களால் அன்பு அந்த நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இது போல பழிக்குப்பழி சம்பவம் நடக்க உள்ளதை முன்னரே அறிந்த உளவுத்துறை போலீசார், எச்சரிக்கையாக குற்றவாளிகளின் போன் உரையாடல்களை கண்டறிந்து கண்காணித்தனர்.

திருமழிசை உடையார் ஏரி பகுதியில் பதுங்கி இருந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் ஏரிக்குள் சுற்றி வளைத்தனர். அதில் குழுவாக இருந்த ரவுடிகள் சிதறி ஓடியதில் எபியின் கூட்டாளிகளான ஹரிகரசுதன், கிருபாகரன், லோகநாதன் ஆகிய மூன்று பேரை வெள்ளவேடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 நாட்டு வெடிகுண்டு இரண்டு பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!