திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் ஏ. ஆர். டைரி நிறுவனர் உள்பட நான்கு பேரை சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டினார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநரின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிஐ, ஆந்திர காவல் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணி... ஈரோடு தேர்தல் ஒத்திகையா.? கொளுத்தி போடும் திருமாவளவன்.!
சிபிஐ இணை இயக்குநர் வீரேஷ் பிரபு தலைமையில் நடந்த இந்த விசாரணையில்
திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டைரி உரிமையாளர் ராஜசேகரன், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விபின் குப்தா, போமில் ஜெயின் மற்றும் அபூர்வா சாவ்தா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
நாளை அவர்களை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடை கொடுப்பதெல்லாம் மன்ற செயல்பாடு...எப்போது அரசியல்வாதியாக மாறப்போகிறார் புஸ்ஸி ஆனந்த்