ஒரு மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு பிரதான வருவாயாக அமைவது சொத்து வரிகள் தான். இதன் மூலம் மக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் சுகாதாரப்பணிகள் தொட்ட கழிவுகளை அகற்றுதல் தெருவிளக்குகள் அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கான செலவீனங்களை இதிலிருந்தே சமாளிப்பர்.
இதனாலே நான் ஒவ்வொரு மாநகராட்சிகளும் அவர்களது குடியிருப்பு வாசிகளிடம் சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்த உரிமையாளர்களுக்கு நிர்பந்தப்படுத்தி வருகின்றன. மேலும் சொத்து வரி மற்றும் தொழில் வரியை கட்டுவதற்கு பல்வேறு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அரையாண்டு ஆரம்பிக்கும் முதல் 30 நாட்களில் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் ஐந்து சதவீதமும், அதிகபட்சமாக 5000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வரியை கட்டாமல் போனால் உரிமையாளர் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்தும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்..! ரூ.24 ஆயிரம் கோடி கேட்கிறது மோடி அரசு.. காரணம் என்ன..?
இவ்வாறு திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரி உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு சொத்து வரி உயர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தினர்.
அதுமட்டுமின்றி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் வரவழைக்கப்பட்டு ஆட்சியர் முன்னிலையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை தமிழக அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்படும் என்றும் மேயர் தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார்..
அதன்படி சொத்து வரி குறைப்பு தீர்மானம் மற்றும் விளக்கு கடிதம் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரிவிதிப்பு தொடர்பான தகவல்கள் 4 மண்டலங்களில் உயர்த்தப்பட்ட சொத்து வரி விலைப்பட்டியல் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து அதில் சொத்து வரி அதிகரிக்கப்பட்டதை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததை அடுத்த தமிழக அரசு இதனை பரிந்துரை செய்ய வேண்டும் என அதன் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கடிதம் இயக்குனர் வாயிலாக துறை செயலருக்கும் அரசின் தலைமைச் செயலருக்கும் பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆவேசமாக செங்கோட்டையனை நெருங்கிய நிர்வாகி... அடுத்த நொடியே அதிமுக கூட்டத்தில் நடந்த பரபர சம்பவம்..!