பிரபல "டைம்" பத்திரிகை சிறந்த பெண்மணிகள் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான (2025) இந்த விருது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சிறந்த மற்றும் சமத்துவமான உலகத்தில் நோக்கி பாடுபடும் அசாதாரண தலைவர்கள் என்ற பிரிவினில் இந்த ஆண்டு 13 பெண்கள் உலக அளவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பெண் தான் 45 வயதான இந்த பூர்ணிமா தேவி பர்மன்.

இந்திய உயிரியலாளரும் (பயாலஜிஸ்ட்) வனவிலங்கு பாதுகாவலருமான பூர்ணிமா தேவியின் சொந்தக்கதை மிகவும் சோகமானது. அவர் தன்னுடைய கணவர் தலைமையிலான போதை பொருள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பலில் இருந்து தப்பி வந்தவர். அதன் பின் பாலியல் வன்முறைக்கு எதிரான உலகளாவிய வக்கீல்களில் ஒருவராக இவர் மாறினார். அதன் பின் இவர் வன பறவைகள் ஆர்வலராக மாறியது சிறப்பான இந்த ஒரு தருணத்தில் தான் என்று சொல்லி பூர்ணிமா அது பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழா: பாதுகாப்பு படை வீரர்கள் 95 பேருக்கு வீர தீர செயல் விருது!

கடந்த 27 ஆம் ஆண்டு அசாமில் ஒரு மரம் வெட்டப்படுவதாக அவருக்கு டெலிபோன் அழைப்பு வந்தது. அந்த இடம் அழிந்து வரும் ஒருவகை நாரை பறவைகள்தங்கி இருந்த பகுதி. உடனே அங்கு விரைந்து சென்ற பூர்ணிமா "ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மரம் வெட்ட வந்தவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அப்போது அவர் சந்திக்க வேண்டியது இருந்தது. அவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருந்தனர். ஆனால் அதைவிட அந்த பகுதியில் சிறிய நாரை பறவைகளின் இனம் அழியும் நிலையில் இருந்தது அவருடைய கவனத்திற்கு வந்தது.

தனது குழந்தைகளின் நலனை விட அந்த இடத்தில் இருந்த இரண்டு பிஞ்சு பறவைகளை எப்படியும் காப்பாற்றிய தீர வேண்டும் கருதி அவர் அன்று முதல் இந்த இன பறவைகளை அழிவிலிருந்து மீட்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டதாக தெரிவித்தார்.
அவருடைய சேவையின் பயனால் இந்த பறவைகளின் எண்ணிக்கை அந்த பகுதியில் 450 ஆக உயர்ந்தது. 2023 ஆம் ஆண்டில் இந்த பறவைகள் அழிந்து வரும் இனத்திலிருந்து ஒரு படி முன்னேறி "அச்சுறுத்தலுக்கு உள்ளான" இனமாக மறுவகை படுத்தப்பட்டது.
அசாமில் இந்த பறவைகளின் எண்ணிக்கை 1800க்கும் அதிகமாக இப்போது உயர்ந்து இருக்கிறது என்று விருது பெற்றவர்களுக்கான சுய விவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகளின் கூடுகளை பாதுகாப்பதற்கும் வரவு இடங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் சுமார் 20 ஆயிரம் பெண்களைக் கொண்ட "ஃபார்கிலா ஆர்மி" என்ற அமைப்பு இப்போது பூர்ணிமாவுக்கு பாதுகாப்புடன் உதவுகிறது.
இந்த வலை அமைப்பு அசாமில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பின்னர் கம்போடியாவிற்கும் விரிவடைந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சில பள்ளிகள் அவருடைய பணிகளைப் பற்றி மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன.
'இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பறவைகளுக்கு ஆடை அணிவது பாடல்கள் அல்லது புதிய குஞ்சுகளுக்கு வளைகாப்பு விழாவை கொண்டாடுவோம். இந்த பறவையெல்லாம் தற்போது அந்தப் பகுதியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாக" பூர்ணிமா தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண்கள் பட்டியலை தயாரிப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் உலகெங்கும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் இப்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் எவை? பாலின அடிப்படையான வன்முறை மற்றும் பணிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் முதல் காலநிலையின் ஆபத்துக்கள் வரை சவால்கள் ஏராளமாக இருப்பதாக "டைம்' பத்திரிகை கூறுகிறது.
ஆனால் எல்லா இடங்களிலும் அந்த அச்சுறுத்தல்கள் காணப்படலாம் மாற்றத்தை வலியுறுத்தும் தலைவர்களும் அவ்வாறே காணப்படலாம் இந்த ஆண்டு பட்டியலில் உள்ள 13 பெண்கள் அனைவருமே தங்கள் சொந்த வழியில் ஒரு சிறந்த சமத்துவமான உலகத்தை உருவாக்குவதை நோக்கிப் பாடுபடுகிறார்கள் என்றும் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பூர்ணிமா தேவி பர்மனுடன் நடிகை நிக்கோல் கிட்மேன் மற்றும் பிரான்சின் ஜிசெல் பெலிகாட் உருப்பட மேலும் 12 பேர் இந்த சிறந்த பெண்மணிக்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: டன் கணக்கில் சமையல் மஞ்சள் கடத்த முயற்சி.. விரட்டி பிடித்து பறிமுதல் செய்த அதிகாரிகள்!