பாகிஸ்தான் ரயிலை பலூச் விடுதலைப்படையினர் கடத்திய சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவிலும் இதே போன்று ரயில் கடத்தல் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கிச் சென்றபோது, அந்த ரயிலை பலூச் விடுதலைப் படையினர் முதலில் வெடிவைத்து தடம்புரளச் செய்தனர். அதன்பின் அந்த ரயிலைக் கடத்தினர்.

பயணிகளையும், ரயிலையும் மீட்க தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவம் சண்டையிட்ட நிலையில், இந்த சண்டையில் பயணிகள் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மனிதவெடிகுண்டாக வந்திருந்த தீவிரவாதிகள் 33 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதையும் படிங்க: உயிரோடு விட்ருங்க.. காலில் விழுந்து கெஞ்சினோம்..! பாக். ஜாபர் எக்ஸ்பிரஸ் திகில் சாட்சி..!
தீவிரவாதிகள் விமானத்தை, பேருந்தை கடத்தியதைக் கேள்பட்டிருக்கிறோம், ஆனால், ரயில்கடத்தல் சம்பவம் பாகிஸ்தானையே உலுக்கிவிட்டது. இதேபோன்ற ரயில் கடத்தல் சம்பவம் இந்தியாவிலும் ஒருமுறை நடந்துள்ளது. ஆனால், வெற்றிகரமாக ரயிலைக் கடத்தியவர்களை பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.
இந்தியாவில் ரயில் கடத்தல் சம்பவம் 2013, பிப்ரவரி 6ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது. அந்த மாநிலத்தில் உல்ள துருக் நகரிலிருந்து ரெய்கார்க் நகருக்கு புறப்பட்ட ஜன் சதாப்தி ரயிலைத் தான் துப்பாக்கி முனையில் சிலர் கடத்தினர்.

ரயில் பைலட், துணை பைலட் ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த ரயில் செல்ல வேண்டிய இடத்துக்கு மாறாக வேறு ஒரு ரயில்நிலையத்துக்கு ரயிலை் கடத்தினர். சத்தீஸ்கரில் இருந்த மிகப்பெரிய ரவுடி, தாதாவான உபேந்திராவின் மகன் பிரிதம் சிங் என்ற ராஜேஷ்தான் இந்த ரயிலைக் கடத்தினார். இந்த ரயிலை அவர்களின் கூட்டாளிகள் உதவியுடன் கடத்திச் சென்றனர்.
உபேந்திராவை ஒரு வழக்கில் போலீஸார் கைது செய்து பிலாஸ்பூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருந்தனர். துருக் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக உபேந்திராவை போலீஸார் அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தபின், உபேந்திராவை அழைத்துக் கொண்டு போலீஸார் பிலாஸ்பூர் சிறைக்கு ஜன்சதாப்தி ரயிலில் சென்றனர். தனது தந்தையை ஜன் சதாப்தி ரயலில் போலீஸார் சிறைக்கு அழைத்துச் செல்வதை அறிந்த ராஜேஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரயிலைக் கடத்தினார்.

உபேந்திரா அவரின் மகன் ராஜேஷும் ரயிலைக் கடத்தி, கும்ஹாரி ரயில்நிலையத்தில் ரயிலை நிறுத்தக் கூறினார். கத்திமுனையில் மிரட்டியதால் ரயில் பைலட்டும் ரயிலை நிறுத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது தந்தை உபேந்திராவை அழைத்துக் கொண்டு ராஜஷ் அங்கிருந்து தப்பினார்.
இருவரும் தப்பிச் சென்று நீண்ட நேரத்துக்குப்பின்புதான் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரி்ந்தது. ஆனாலும், தீவிரத் தேடுதல் நடத்தியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த சில மாதங்களுக்குப்பின் உபேந்திராவும், அவரின் மகன் ராஜேஷும் வேறு ஒரு வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 27 தீவிரவாதிகளை போட்டு தள்ளிய பாக். ராணுவம்..! 155 ரயில் பயணிகள் உயிரோடு மீட்பு..!