அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்று பேசிய துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கருக்கு திருச்சி சிவா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஆர்டிக்கல் 142 ஒரு அணு ஆயுதமாக மாறி உள்ளது என்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுப்படுத்தி உள்ளது என்றும், அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மத்தளமாய் அடி வாங்கும் கே.என்.நேரு.. இரண்டு பக்கமும் கட்டங்கட்டிய ஸ்டாலின்.. ஓரங்கட்ட திட்டமா?

அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன., இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த துணை குடியரசுத் தலைவர் ஐகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை எனவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்முடி நீக்கப்பட்ட 30 நிமிடத்தில் அடுத்த அதிரடி... மொத்தமாய் முடித்துவிட்ட மு.க.ஸ்டாலின் ..!