அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தார்.

மேலும் அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தம்பதியை திடீரென அந்நாட்டு அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தவர்கள் கிளாடிஸ்- நெல்சன் கோன்சலஸ் தம்பதியினர். இவர்கள் கடந்த 1990ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
இதையும் படிங்க: கூடுதல் சம்பளம் தரும் டொனால்ட் டிரம்ப்? சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு எவ்வளவு கிடைக்கும்?

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் இந்த குடும்பத்தினர் சுமார் 35 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூவரும் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். அவர்கள் மூன்று பேரும் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை மூலம் குடியுரிமை பெற்றுவிட்டனர். இந்த நிலையில் கிளாடிஸ்- நெல்சன் கோன்சலஸ் தம்பதி நாடு கடத்தப்பட்டதால் அவர்களின் 3 குழந்தைகளையும் விட்டுப் பிரிய வேண்டிய சூழலுக்கு கிளாடிஸ்- நெல்சன் ஜோடி தள்ளப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் திடீரென கிளாடிஸ் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டிலேயே வைத்து 55 வயதான கிளாடிஸ் கோன்சலஸ் மற்றும் 59 வயதான நெல்சன் கோன்சலஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுமார் 3 வாரங்கள் அவர்களை அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். பெற்றோருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களின் பிள்ளைகள் பதறிய நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி இருவரையும் சொந்த நாடான கொலம்பியாவிற்கு நாடு கடத்திவிட்டதாகக் கூறி அதிகாரிகள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 5.32 லட்சம் பேர் நாடு கடத்தல்... டிரம்ப் அதிரடி முடிவு... யார் அவர்கள்?