விஜயின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜிக்கு தவெக கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. மாமல்லபுரம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அனுமதி சீட்டு இருபவர்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர் பவுன்சர்கள்.

விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபரின் அனுமதிச்சீட்டு மற்றும் கட்சி அட்டை ஆகியவற்றை பரிசோதித்த பிறகு உள்ளே அனுமதித்தனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி தனது மாருதி ஸ்விப்ட் காரில் டிரைவர் உடன் வந்தார். வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அவர் கையில் பாஸ் இல்லாததால் திருப்பி செல்லுமாறு பவுன்சர்கள் மற்றும் காவலர்கள் கூறினர்.
இதையும் படிங்க: சாமியார் தோற்றத்தில் பவன் கல்யாண்.. இமய மலைக்கு போறீங்களா?.. பிரதமர் மோடி தமாஷ்..!

சுமார் 15 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தாடி பாலாஜி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது விஜயின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட தாடி பாலாஜிக்கு இந்த நிலைமையா? என அங்கிருந்த தவெக கட்சித் தொண்டர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க விழா முழுவதுமே வெறும் சொதப்பல் காட்சிகளாக இருந்தது விழாவுக்கு கொடுக்கப்பட்ட 2000 பாஸ்களில் அனைவருக்கும் சரியான இருக்கை வசதி செய்யப்பட்டும் சரிவர அமர வைக்கப்படவில்லை.

பாஸ் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை உள்ளே அனுமதிக்காத காட்சிகள் அதிகம் அங்கு பார்க்க முடிந்தது 2000 பேர் மட்டுமே இருக்க வசதி இருந்தும் 3000 மேற்பட்டோருக்கு பாஸ் கொடுத்தது இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதேபோன்று சாப்பாட்டு ஏரியாவிலும் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ அடித்து பிடித்து நடிகர் தாடி பாலாஜி மண்டபத்திற்குள் சென்றார்.
சில நாட்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக தாடி பாலாஜி ஃபேஸ்புக் கமெண்ட் மற்றும் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திக்கு எதிராக கையெழுத்து... விஜய்யை அவமதித்த பி.கே... அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!