பீகாரின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி. இவர் 2014-15 காலகட்டத்தில் பீகார் முதல்வராகவும் இருந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் கயா தொகுதி எம்.பி.யாக தேர்வானார். தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக உள்ளார்.
இவரது மகள் வழி பேத்தி சுஷ்மா வயது 30. இவரது கணவர் ரமேஷ் சிங், இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் சிங் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர். இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துள்ளது.

சுஷ்மா தேவி கயா மாவட்டம் டெட்டுவா கிராமத்தில் அட்ரி பகுதி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். பீகார் மகா தலித் விகாஸ் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நலத்திட்டங்களை தலித் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விகாஸ் மித்ரா பொறுப்பில் சுஷ்மா பணியாற்றினார்.
லாரி டிரைவரான ரமேஷ், சுஷ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சில காலமாகவே பாட்னாவில் தனியாக வசித்து வந்துள்ளார். சுஷ்மா தேவி, அவரது குழந்தைகள் மற்றும் சகோதரி பூனம் குமாரி ஆகியோர் கயா மாவட்டம் அத்ரி தொகுதிக்கு உட்பட்ட டெதுவா கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: NDA-விலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்.. இனி அது நடக்காது.. அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் அறிவிப்பு!!

இந்த நிலையில் நண்பகலில் கணவர் ரமேஷ் சிங் சுஷ்மா தேவி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுஷ்மாவும் பதிலுக்கு பதில் பேசியதால், கோபம் அடைந்த ரமேஷ், பையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சுஷ்மாவை நோக்கி சுட்டார்.
சுஷ்மா தேவி மீது மார்பு, தலையில் சுட்டுவிட்டு தப்பியோடினார். மற்றொரு அறையில் இருந்த பூனம் மற்றும் சுஷ்மாவின் குழந்தைகள் அவர்கள் இருந்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்த போது சுஷ்மா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது. அதற்குள் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். குண்டு காயமடைந்த சுஷ்மாதேவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அட்ரி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவுந்து தப்பியோடிய கணவர் ரமேஷ் சிங்கை தேடி வருகின்றனர்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக கயா மூத்த எஸ்பி ஆனந்த் குமார் தெரிவித்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வரின் பேத்தி, கணவனால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!