அமெரிக்க எம்.பி.க்கள் லான்ஸ் கூடன், பாட் ஃபாலன், மைக் ஹரிடோபோலோஸ், பிரென்டன் கில், வில்லியம் ஆர் டிம்மன்ஸ் மற்றும் பிரையன் பாபின் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பமீலா பேடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் ஜோ பிடன் ஆட்சியின்போது, அமெரிக்க நீதித்துறை கேள்விக்குரிய சில முடிவுகளை எடுத்துள்ளது, அது அமெரிக்க-இந்தியாவின் நட்புறவை பாதிக்கும் என்று எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சூரியஒளி மின்திட்டத்துக்காக அமெரிக்காவில் இருந்து முதலீ்ட்டாளர்களிடம் இருந்தும், அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும் கோடிக்கணக்கான டாலர்களை அதானி கடன் பெற்றார். இந்த திட்டத்துக்கு சாதகமாக விதிமுறைகளை வடிவமைக்க இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் வழங்கியுள்ளார் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் அதானி மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

அமெரிக்க முதலீட்டாளர்களை வைத்தோ அல்லது அமெரிக்க சந்தைக்கோ இதில் தொடர்பு இருந்தால், மட்டுமே வெளிநாட்டு ஊழல் என்ற பெயரில் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அமெரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்தியாவின் நட்புறவு பல தசமஆண்டுகளாக அமெரிக்காவுடன் சிறந்த முறையில் தொடர்ந்து வருகிறது. அரசியலைக் கடந்து வர்த்தகம், பொருளாதாரம், சமூக கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் இரு பெரிய ஜனநாயக நாடுகளும் நட்புறவோடு இருந்து வருகின்றன.
இதையும் படிங்க: "மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" ; மம்தா பானர்ஜி திட்டவட்டம்
வரலாற்று ரீதியான இந்த நட்புறவு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான சீரான தொடர்பு, கடந்த அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தால் எடுத்த சில முடிவுகளால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவில் நிர்வாகிகளைக் கொண்ட அதானி குழுமத்திற்கு எதிரான ஒரு வழக்கைத் தொடருவதும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார்கள் என்றும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, பிடன் நிர்வாகம், நீதித்துறை, அதானியின் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடர்ந்து, அமெரிக்க நலன்களுக்கு கேடுவராமல் தப்பித்தது.
சில புறக்காரணிகள் இருந்தால்தான் இந்த அடிப்படையில் அதானி மீது வழக்குத் தொடரலாம், அவ்வாறு இல்லாத நிலையில், இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உறவை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது.
இந்த தவறாக தொடரப்பட்ட வழக்கு, அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன், இந்தியா போன்ற நட்பு நாட்டுடனான உறவுக்கு தீங்கு விளைக்கும் சூழலுக்கு வந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வந்த அதிபர் ட்ரம்பின் உறுதிப்பாட்டை கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் எங்கள் பொருளாதார உறவை பாதுகாக்க வேண்டும்.

அமெரிக்க பொருளாதாரத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டாளர்கள் மீது தேவையின்றி வழக்குகளை தொடர்வது தேவையற்றது. இந்த காரணிகளை கருத்தில் கொண்டும், அமெரிக்க நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதானி மீதான வழக்கத் தொடர்வதால் அமெரிக்காவுக்கு நலன்களைவிட கேடுதான் அதிகம் விளையும்.
அமெரிக்காவும் இந்தியாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்வர ஊக்குவித்தல் செய்கிறார்கள், அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவும் பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசுகளாகத் திகழ்கின்றந. இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான மற்றும் நன்மைதரக்கூடிய நட்புறவின் ஆழமான ஆற்றலை அதிபர் டிரம்ப் எப்போதும் அங்கீகரித்துள்ளார்.

ஆதலால் ஜோ பிடன் நிர்வாகத்தில் இருந்த நீதித்துறை அதிகாரியின் நடத்தையை விசாரிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் உண்மையை வெளிக்கொணர ஒருங்கிணைந்த முயற்சிக்காக இந்த வழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அமெரிக்க எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..