திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலைச் சுற்றி தொழிலதிபர் ஷிவ் நாடார் கொடுத்த நன்கொடையில் பக்தர்களின்சதிக்காக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த கட்டடத்தில் தில்லு முல்லுஇ நடப்பதாக வீடியோ வெளியிட்டவரின் வீட்டிற்கு போலீஸார் அதிகாலை 4 மணிக்கே சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில்லு 200 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார் ஷிவ நாடார். அந்தப்பணத்தில் கோவிலை சுற்றி கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ''அந்த கட்டடத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த பொருட்களை திருடி விட்டார்கள். எவ்வளவு தரமாக கட்டப்பட்டது? இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள்'' என்று கூறி அங்கு நடக்கும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி இருந்தார் பாஜகவை சேர்ந்த பிரித்திவிராஜ் என்கிற நபர்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு ஏன் முக்கியமானது?.. வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
அவர் வெளியிட்ட வீடியோவில், ''சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த ஒவ்வொரு பைப்பும் 1500 ரூபாய் 2000 ரூபாய் என விலை மதிப்பு மிகுந்தது. ஆனால், இப்போது அந்த குழாய்கள் ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் கழற்றி சென்று விட்டார்கள்'' என வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரித்திவிராஜ் என்பவரை தேடி அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்று தேடிச் சென்ற போலீசார் அவருடைய குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பிரித்விராஜனை தேடிச் சென்ற போலீசாரிடம் ''என்ன வழக்கிற்காக அவரை அழைத்துச் செல்ல வந்திருக்கிறீர்கள்? என கேட்டு அவரது குடும்பத்தினர் கதவை திறக்க மறுத்தனர். கடைசிவரை அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாத போலீசார் அங்கிருந்து வெகு நேரம் கழித்து திரும்பி சென்றனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், ''அதிகாலை 4 மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். எந்த வழக்கும் பிரிதிவிராஜன் மீது இல்லை. என்ன வழக்கு என்று போலீஸரிடம் விசாரித்த போது அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. மக்கள் பாதுகாப்பிற்காக எதையும் செய்யாத போலீசார், அதிகாலை 4 மணிக்கே வந்து அடாவடியாக வந்து கதவை திறக்கச் சொல்கிறார்கள். நமது போலீஸ் அருமையான போலீஸ். அதிகாலை காலை நான்கு மணிக்கு வந்து எவ்வளவு தீவிரமாக வேலை பார்க்கிறார்கள். நாங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக புகார் அளித்தோம். அந்த புகாரை கிடப்பில் போட்டு விட்டார்கள். இப்போது உண்மையை சொல்லி வீடியோ வெளியிட்டதற்காக அதிகாலை 4 மணிக்கே வந்து மிரட்டுகிறார்கள்'' எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறையின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் இதுகுறித்து, ''தமிழ்நாடு காவல்துறையின் மிக மோசமான நடவடிக்கை. திமுக அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு துணை போகும் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட கழிவறை தரமானதாக இல்லை என்று வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகியின் இல்லம் தேடி அதிகாலை 4 மணிக்கு சென்றுள்ளது காவல்துறை. இதைத் தவிர முக்கியமான வேலைகள் ஏதும் காவல்துறைக்கு இல்லையா? தினந்தோறும் அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல்துறை இவ்வளவு மும்முரமாக வேலை செய்யவில்லையே'' என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி, மகள்கள் சேர்ந்து தந்தை மீது தாக்குதல்.. சில நாட்களில் தந்தையின் மர்மச் சாவு ஏற்படுத்திய பரபரப்பு..!