பண்டைய காலம் தொட்டே, தைத்திருநாளில் புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் 6 தலைமுறையாக தமிழ்நாட்டில் ஒரு கிராமமே பொங்கல் கொண்டாடாமல் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பக்கமுள்ள பொட்டல் புதூர் நகரம் தாண்டிய ரிமோட் ஏரியாவிலிருக்கிறது கேளையாப்பிள்ளையூர் என்கிற கிரமம். சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட 1300க்கும் கூடுதலான பல சமூக மக்களை உள்ளடக்கியது. அந்தக் கிரமத்தின் வாழ்வாதாரமே விவசாயம், பீடி சுற்றுதல் மற்றும் விவசாய கூலித் தொழில்களேயாகும். ஆறு தலைமுறைகளுக்கு முன்பு தமிழர்களின் முக்கிய திருநாளான தைத் திருநாளில் கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர் வழக்கம்போல் தெருக்களில் மஞ்சள் குலை, கரும்புகளால் அலங்கரித்து புத்தரிசி புதுப்பானையில் பொங்கலிட்டிருக்கிறார்கள்.

ஆனால் பொங்கல் பானையில் உலை கொதித்ததோ தவிர, பொங்கல் பொங்கி வரவில்லையாம். பொங்கல் பொங்கி வந்திருந்தால் செல்வமும் இன்பமும் பொங்கும் என்பது அந்த ஊரின் ஐதீகம், ஆனால் பொங்கலுக்கு முன்பாக உலை மட்டும் கொதித்தால் அது மிகப்பெரிய அபசகுணமாக கருதப்படுகிறது. இதனை தெய்வ குத்தமாக கருதி அந்த ஓர் மக்கள் ஒன்றல்ல, இரண்டல்ல 6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடுவது கிடையாது.
இதையும் படிங்க: பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் - காரணம் என்ன?
அதன்படி, தமிழ்நாடே பொங்கல் பண்டிகை கொண்டாடினாலும், இங்கு யார் வீட்டு வாசலில் பானை வைத்து பொங்கல் வைப்பது கிடையாது. அதுமட்டுமின்றி வழக்கமான பொங்கல் கொண்டாட்டமான வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, கருப்புகளைக் கொண்டு அலங்கரிப்பது, கோலம் போட்டி, பேச்சு போட்டி என விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என எந்த கொண்டாட்டமும் இங்கு கிடையாது.

பல்லாண்டாக பொங்கல் வைத்து கொண்டாடுவது இந்த கிராமத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், யாரும் இதற்கு கட்டாயப்படுத்தப்படுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த கிராமும் முழு மனதாகவே இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்னோர்கள் சொன்ன வாக்கிற்காக பல ஆண்டுகள் கழித்து இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஒட்டுமொத்த கிராமும் பொங்கல் கொண்டாடாமல் இருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் குளறுபடி; அரெஸ்ட் பண்ண உத்தரவிட்ட ஆட்சியர் - பரபரக்கும் பாலமேடு!