மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவின் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 73 வழக்குகள் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் வக்பு சொத்தை முடிவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பினர்.மேலும் சரமாரியாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என கூறினர்.
இந்த நிலையில், வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
இதையும் படிங்க: முதுகை உடைப்போம்… பாக்., ராணுவ தலைவர் எச்சரிக்கை… இந்தியாவை பார்த்து இவ்வளவு நடுக்கமா..?
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்... யார் இவர்?