ஜெயலலிதா ரஜினிகாந்த் இருவரும் கலைத்துறையில் உச்சத்தில் இருந்தவர்கள் முன்னவர் உச்சத்தில் இருந்து பின்னர் விலகி அரசியல்வாதியாகி அரசியலிலும் உச்சத்தில் இருந்து தான் இறக்கும்போது முதல்வராக மறைந்தார். பின்னவர் சாதாரண பஸ் கண்டக்டர் ஆக இருந்து கலைத்துறையில் நுழைந்து இன்றும் உச்சத்தில் இருக்கிறார். வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸ் இவரை நம்பி நடக்கிறது. ரஜினிகாந்த் ஜெயலலிதா இருவருக்குமான நட்பு-மோதல் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றை என்று சொல்லலாம்.

1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற மிகப் பெரிய சொல்லாடலை ரஜினிகாந்த் பயன்படுத்தினார். 96 இல் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு ரஜினிகாந்தின் வாய்சும் பெரும்பணியாக இருந்தது. ஜெயலலிதாவும் ரஜினியும் எப்படி மோதல் போக்கில் இருந்த நிலையில் திடீரென இருவரும் தங்களது நிலையை உணர்ந்து நட்பு பாராட்ட தொடங்கினர். இது பற்றி இன்று போயஸ் இல்லத்திற்கு ஜெயலலிதா பிறந்தநாளில் மரியாதை செலுத்த வந்த ரஜினிகாந்த் ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் தனது சந்திப்புகளை குறிப்பிட்டு மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...!

ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்திற்கும் தனக்குமான உறவு பற்றி கூறும்போது, இன்றோடு நான்காவது முறையாக போயஸ் இல்லத்திற்கு வருகிறேன். இதற்கு முன்பு மூன்று முறை இதே போல போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவுடன் சந்தித்து உரையாடிய அந்த பசுமையான நினைவுகள் வந்து போகிறது என்று தெரிவித்தார். ஒவ்வொரு காலகட்டமும் பத்தாண்டுகளுக்கு மேல் இடைவெளி உள்ள காலகட்டங்களாகும். 1975 ஆம் ஆண்டுக்கு மேல் திரையுலகிற்கு வந்த ரஜினிகாந்த் திரை உலக வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்த ஜெயலலிதா உடன் எப்படி எந்த சூழ்நிலையில் சந்தித்தார் என்பதை பார்ப்போம்.

அவர் கூறிய மூன்று சந்திப்புகள் பற்றி நாம் விரிவாக பார்ப்போம். முதலாவது சந்திப்பு 1977 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் ஹீரோவாக நடிக்க தான் ஒப்பந்தமான பொழுது தன்னை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதன் பேரில் போயஸ் தோட்டம் சென்றதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரஜினிகாந்த் சந்திப்புக்கு பின் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. காரணம் ஜெயலலிதாவுக்கு பல விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதால் கைவிடப்பட்டது என்று கூறுகிறார்கள். மறுபுறம் ஜெயலலிதா சரத்பாபு நடித்த நதியை தேடி வந்த கடல் என்கிற படம் தான் அந்த படம் பின்னர் ரஜினிகாந்த் மாற்றப்பட்டு சரத்பாபு ஹீரோவாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதில் எது உண்மை என்று தெரியவில்லை ஆனால் மற்றொரு விஷயம் மிகத் தெளிவாக திரை உலகில் பேசப்படும் விஷயமாகும். அதாவது சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் கே பாலாஜி, நடிகராக அறிமுகமாகி ஒரு கட்டத்திற்கு மேல் பட தயாரிப்பாளராக மாறினார். பெரும்பாலும் ஹிந்தி படங்களை தமிழில் தயாரிப்பது என்பது அவரின் முக்கியமான பணி. எங்க மாமா, ராஜா, நீதி, உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார். இதில் பெரும்பாலும் சிவாஜி கணேசனே ஹீரோவாக நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயலலிதாவும் கே.பாலாஜியும் சகோதர சகோதரிகள் போல் நெருக்கமான பந்தம் இருவருக்கும் உண்டு. அந்த அடிப்படையில் 1979 ஆம் ஆண்டு டான் இந்தி படத்தை தமிழில் ரஜினியை வைத்து பில்லா என்கிற பெயரில் கே.பாலாஜி தயாரித்தார் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை ஆரம்பத்தில் கே.பாலாஜி கேட்ட பொழுது அந்த நேரத்தில் எம்ஜிஆர் அழைப்பின் பேரில் அரசியலில் நுழையும் எண்ணம் இருந்ததால் ஜெயலலிதா நடிக்க மறுத்துவிட்டா.ர் இது பின்னர் ரஜினிகாந்த் நடிப்பதால் நடிக்க மறுத்ததாக தகவல் வந்தது. அடுத்து அவற்றை மறுத்து ஜெயலலிதா கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டு இருந்தார்.

இந்த நினைவுகளை தான் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளாரா என்பது தெரியவில்லை. அடுத்து ரஜினிகாந்த் அவரது திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு வரவேற்க சென்றதாக குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்துக்கும் அதிமுகவிற்கும் பெரும் ஒற்றுமை உண்டு ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டுவதற்கு முயன்றபொழுது அதற்கான கட்டுமான விவகாரங்களில் ஒரு விஐபி இடையூறு செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த பொழுது முதல்வர் எம்ஜிஆரை பார்த்து விடுங்கள் என்று சிலர் சொன்ன ஆலோசனைகளில் முதல்வர் எம்ஜிஆரை, ரஜினிகாந்த் சென்று சந்தித்து தனது நிலை பற்றி கூறியவுடன் உடனடியாக எம்.ஜி.ஆர் திருநாவுக்கரசை அழைத்து கட்டட ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வேலையை செய்து கொடுக்கும்படி உத்தரவிட உடனடியாக முடிந்து தான் ராகவேந்திரா மண்டபத்தை முடிக்க முடிந்தது என ரஜினி கூறியிருந்தார்.

1989 ஆம் ஆண்டு ராகவேந்திரா மண்டபத்தை கட்டி முடித்து திறக்கும் நேரத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். கலைஞர் முதல்வராகிய இருந்தார் ஜெயலலிதாவை அந்நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக தான் சென்றதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ராகவேந்திரா மண்டபம் திறப்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அப்போதைய முதல்வர் கலைஞர், அதிமுகவிலிருந்து திருநாவுக்கரசர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், சோ, மம்முட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த மண்டம் திறப்பு விழாவில் ஏழைகளுக்கு திருமணம் நடத்த இலவசமாக மண்டபம் தரப்படும் என ரஜினி அறிவிக்க சிவாஜி கணேசனும் கலைஞரும் நெகிழ்ந்துப்போய் பாராட்டினர். ஆனால் காஸ்ட்லியான அந்த மண்டபம் கடைசி வரை ஏழைகளுக்கு திறக்கப்படவே இல்லை என்பது தனிக்கதை.

மூன்றாவதாக ரஜினிகாந்த் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.1993 ஆம் ஆண்டுக்குப்பின் ரஜினி ஜெயலலிதா உறவு முறிந்தது. 96-ல் அரசியல் ரீதியாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார். 98 லும் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னர் தனது சொந்த பிரச்சனையில் ஜெயலலிதா உதவியை நாடியதாகவும் அதற்கு ஜெயலலிதா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியதாகவும் ஒரு தகவல் உண்டு.

அதன் பின்னர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் உற்ற நண்பரானார். 2004 ஆண்டு மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்திற்கு வந்து தாலி எடுத்து கொடுக்கும்படி ரஜினிகாந்த் கேட்டுக்கொள்ள அதேபோல் ஜெயலலிதா வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். இவைகள் தான் ரஜினிகாந்த சொன்ன அந்த 3 சந்திப்புகள் ஆகும்.
இதையும் படிங்க: டிவி பெட்டியை உடைத்துவிட்டு ஊழலுக்கு டப்பிங் கொடுக்கிறார்... கமலை தாறுமாறாக விமர்சித்த விஜய் கட்சி.!