சைக்கிளில் தொடங்கி, கார்கள் போன்ற வாகனங்கள், வீடு போன்ற பிற பொருட்களை வாடகைக்கு எடுப்பதைப் பற்றி தான் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சில குதிக்கிரமங்களில் மனைவிகளையும் வாடகைக்கு எடுக்கும் நூதனமான பழக்கம் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்று வரை இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அவர்களுடைய வட்டார மொழியில் இந்த நடைமுறையை "தாடிச்சா பிரதா" என்று அழைக்கிறார்கள். கிராமத்தின் சில பணக்காரர்களுக்கு மணமகள் கிடைக்கா விட்டால் இதுபோன்று தற்காலிக மானைவிகளை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.

ஆனால், அதிகாரப்பூர்வமான நிறுவனம் போல் அமைப்பு ரீதியாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு மூலம்தான் ஒருவர் மனைவியை வாடகைக்கு எடுக்க முடியும்.
இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.... வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் ...!
10 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை அந்தப் பெண்களை இவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். தொகை பற்றிய பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான முத்திரை தாளில் இந்த ஒப்பந்தம் எழுதப்படுகிறது.
கைமாற்றிக் கொள்ளலாம்
வாடகைக்கு எடுக்கப்பட்ட பெண்களுக்கு முத்திரைத்தாள் வழங்கப்படுவதன் மூலம் அந்த பெண்ணை மற்றவருக்கு கைமாற்றிக் கொள்ளவும் இந்த அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

அதேபோல் ஒப்பந்தத்தின் முடிவில் கூடுதல் தொகைக்கு இந்த ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் வாடகை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். இதற்கான பிரமாண பத்திரத்தை அந்த பெண் அளிக்க வேண்டும்.
அதன் பிறகு அந்தப் பெண் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்த தொகையை தனது முன்னாள் கணவருக்கு திருப்பி தர வேண்டும் மற்றொரு அவனிடம் இருந்து அதிக பணம் பெற்றுக் கொள்ளும் பெண் ஒப்பந்தத்தினை மீறியதாக கருதப்படுபவார். அந்தப் பெண்ணுடன் ஒப்பந்தத்தை தொடர ஆண்கள் விரும்பினால் கூடுதல் தொகை செலுத்தப்பட வேண்டும்.

இது பற்றி செய்தியாளர்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது இந்த பழக்கம் இருப்பதை போலீசார் ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்த சந்தை முறையில் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக புகார்கள் வரவில்லை. மேலும் இது குறித்து கிராமத்தில் ஒருவர் கூட புகார் கொடுக்க முன்வராததால் எங்களால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்தனர்.
இதில் வேதனைக்கு உரியது என்னவென்றால் வறுமை காரணமாக ஏழைப் பெண்கள் தான் அதிக அளவில் இப்படி வாடகைக்கு விடப்படுவது தான். இது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியுமா என்பது பற்றி இந்த தகவல் வெளிவந்திருக்கும் ஊடகத்தில் எந்த தகவலும் இல்லை.
மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தை தவிர குஜராத் மாநிலத்திலும் இதே போன்ற பழக்க வழக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த கிராமத்தின் விவசாயத் தொழிலாளி ஒருவர் தனது மனைவியை ஒரு மாத வாடகைக்கு வீட்டு உரிமையாளரிடம் கொடுத்திருப்பதாக புகார் வந்தது.

அந்தப் பகுதியில் இது ஒரு தொழிலாகவே மாறி வருகிறது. 500 ரூபாய்க்கு கூட சில பெண்களை வாடகைக்கு எடுக்கும் அவலமும் இருக்கிறது. கிராமங்களின் ஒரு எருமை மாட்டின் விலை கூட பல ஆயிரக்கணக்கில் இருக்கும்போது 500 ரூபாய்க்கு பெண்களை கை மாற்றுகிறார்கள் என்றால் இதை விட வேதனை வேறு என்னவாக இருக்க முடியும்?
வறுமை மற்றும் பாலின பிறப்பு விகித மாறுபாடு காரணமாக வாழ்க்கைத் துணை தேடுவதில் சிரமம் இருப்பதால் இது போன்ற ஏற்பாடுகள் தான் அவர்களுக்கு மாற்றாக இருக்கிறது. இதே போல் ஜார்கண்ட் ,மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் வறுமை காரணமாக பெண்களை விற்கும் தொழிலும் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ரூ.500 கோடியை புதியவருக்கு உயிலில் எழுதி வைத்த ரத்தன் டாடா... அதிர்ச்சியில் டாடா குடும்பம்..!