அக்டோபர் 9, 2009- சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் அந்த மனிதனின் முகலத்தில் கலவர ரேகை பற்றிப்படர்கிறது. எவ்வளவு விரைவாகப் பறந்து பாகிஸ்தானை அடைய முடியும் என்று அவர் யோசித்துக் கொண்டு இருந்தார். அவர் ஏறித் தப்பித்துச் செல்ல முயன்ற அடுத்த நொடி அமெரிக்க உளவுத்துறை நிறுவனமானஎஃபிஐ கொத்தாகப் பிடித்துத் தூக்கிறதூ. கைது செய்யப்பட்ட நபர் டேவிட் கோல்மன் ஹெட்லி.
தஹாவ்வூர் ஹுசைன் ராணா இந்த ஹெட்லியின் நண்பர். மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான ராணாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் இப்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஹெட்லி செய்த ஒரு தவறு அவரை சிறையில் அடைத்தது. அப்போது அவர் ராணாவை காட்டிக் கொடுத்து விட்டார்.ஹெட்லி எப்போதும் தந்திரமான முறையைப் பின்பற்றியிருந்தார். தான் கடினமான சூழ்நிலையில் சிக்கும் போதெல்லாம், அரசு சாட்சியாக மாறி தனது தண்டனையைக் குறைத்துக் கொள்வார். ஹெட்லி தனது பழைய தந்திரத்தை எஃப்பிஐக்கு முன்பாகவும் பயன்படுத்தினார். மும்பை உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அல்கொய்தா பற்றிய தகவல்களையு போட்டுக் கொடுத்தார். ஆனாலும், எஃப்.பி.ஐ இதில் திருப்தி அடையவில்லை.
இதையும் படிங்க: 26/11 தீவிரவாதியை அமெரிக்காவில் தூக்கியாச்சு..! 14 வருடம் கழித்து மோடி வைத்த ஆப்பு..!
எஃப்.பி.ஐ.யின் அழுத்தத்தால் ஹெட்லி மனம் உடைந்து தஹாவூர் ராணாவின் பெயரையும் சொல்லி விட்டார். மும்பை தாக்குதலின் முக்கிய சதிகாரன் இந்த ராணா.தாக்குதல் சதித்திட்டம் குறித்து ராணாவுக்கு முன்கூட்டியே தெரியும் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. எல்லா சதித்திட்டங்களும் ராணாவின் கூட்டாளிகள் முன்னிலையில் செய்யப்பட்டது. ராணா இலக்கை குறிவைத்தார். அவர் பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார். ராணா மும்பை தாக்குதல்களில் இணைக் குற்றவாளியான பாகிஸ்தான்-அமெரிக்க டேவிட் கோல்மன் ஹெட்லியின் நண்பரும்கூட.

2011 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ விசாரணையின் போது, மும்பை தாக்குதலுக்கு முன்பு புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் ஒரு ஆய்வு நடத்தியதாகவும், டெல்லி, புஷ்கர், புனேவில் உள்ள சபாத் வீடுகள் குண்டுவீசப்பட வேண்டியவை என்று அடையாளம் கண்டதாகவும் ஹெட்லி கூறியிருந்தார். இந்த உண்மைகள் எழுத்தாளர் எஸ்.ஹுசைன் ஜைதியின் ஹாட்லி அண்ட் ஐ என்ற புத்தகத்திலிருந்து வெளிவந்துள்ளன.அவர் 'டோங்ரி டு துபாய்', 'பிளாக் ஃப்ரைடே' போன்ற புத்தகங்களையும் எழுதியவர். அதே பெயரில் திரைப்படங்களாக வெளியாகி சக்கைப்போடு போட்டன.
ஹெட்லி 20 மார்ச் 2007 முதல் ஜூன் 7 வரை மும்பையில் தங்கியிருந்தார்.தாக்குவதற்கு சரியான இடத்தை அவர் தேடிக்கொண்டிருந்த நேரன். ஹெட்லியின் கூறுகையில், ''கொலாபாவில் ஒரு பிரபலமான பேக்கரியைக் கண்டுபிடித்தேன். அங்கு நான் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். கவுண்டரில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு அழகான பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததில் இருந்து நான் நானாகவே இல்லை.

அவளுடன் நட்பு கொண்டு அவளை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வது என்று முடிவு செய்திருந்தேன். அவளை கவர, நான் ரூ.2000 மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கினேன். இங்கிருந்து அவளுடனான எனது நட்பு தொடங்கியது. நான் அவளை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவள் மிகவும் புத்திசாலி. அதனால் அவளை படுக்கைக்கு வரும்படி கேட்க எனக்கு ஒருபோதும் தைரியம் வரவில்லை. பெண்கள் என் பலவீனம். ஆனால் அது அவளிடம் பலனளிக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளான் ஹெட்லி.
இந்த நேரத்தில், மும்பை தாக்குதலில் மற்றொரு கூட்டாளியான தஹாவூர் ராணாவிடமிருந்து ஹெட்லிக்கு அவரது பாகிஸ்தான் எஜமானர்கள் அனுப்பிய செய்திகள் வந்தது.ஹெட்லியை புனே செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.
ஹெட்லி கூறும்போது,''லஷ்கரின் அறிவுறுத்தலின் பேரில், நான் புனேவுக்குச் சென்றேன். அங்கு நான் முதலில் ஓஷோவின் ஆசிரமத்தைப் பார்வையிட்டேன். ஆனால் ஓஷோ ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புக்கு மிகவும் பொருத்தமான இடம் என்று தீர்மானித்தேன். இது இஸ்ரேலிய வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களின் சபாத் மாளிகைக்கு அருகில் இருந்தது. மாலையில் பல வெளிநாட்டினர் இந்த பேக்கரியில் கூடி, புதிதாக சுடப்பட்ட ரொட்டி மற்றும் பிற உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வார்கள்.

ஜூலை 2008-ல் எனது புனே பயணத்திலிருந்து நான் திரும்பும்போது, எனது இலக்குகள் தெளிவாக இருந்தன. தெற்கு மும்பை பகுதிகளும், புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியும் தாக்குதல்களுக்கு மிகவும் பொருத்தமான இடங்களாக இருக்கும் என்று நான் முடிவு செய்திருந்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஹெட்லியும், மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ஹுசைன் ராணாவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் அதிகாரியான மேஜர் இக்பாலிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று வந்தனர். கனடா குடிமகன்களான ராணாவும், ஹெட்லியும் மும்பை தாக்குதல்களுக்கான இடங்களை ஆராய்ந்து, குண்டுவெடிப்புகளுக்கான சரியான இலக்குகள் குறித்து தங்கள் எஜமானர்களிடம் அப்டேட் கொடுத்து வந்தனர்.
ராணாவும், ஹெட்லியும் செல்வாக்கு மிக்க குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள ஒரே இராணுவக் கல்லூரியில் படித்தவர்கள். அப்போது முதல் அவர்கள் நண்பர்கள். அவர்களது கல்லூரி நட்பு தொடர்ந்தது. ஹெட்லி ஹெராயினுடன் பிடிபட்டபோது, அவருக்கு ஜாமீன் பெற ராணா தனது வீட்டை அடமானம் வைத்தார். ஆனால், ஹெட்லி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனது நண்பரை காட்டிக் கொடுப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. பின்னர் ஹெட்லி, ராணாவின் வழக்கில் மிகப்பெரிய சாட்சியானார்.
மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளின் பேரில் ராணா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதலில், ஒரு டேனிஷ் செய்தித்தாளின் அலுவலகம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவுவது. இரண்டாவது, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு பணம் கொடுத்தது. மூன்றாவதாக, மும்பை தாக்குதல்களைத் திட்டமிட உதவியதற்காக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜூன் 2011-ல், சிகாகோ நீதிமன்றம் ராணாவை மூன்றாவது குற்றச்சாட்டான மும்பை தாக்குதலில் இருந்து விடுவித்தது. ஆனால் முதல், இரண்டாவது குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு, அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், ராணாவுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், இந்தியா மகிழ்ச்சியடையவில்லை.
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ, ராணாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும், அங்கு அவருக்கு அதற்கேற்ப தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியது. ராணா விடுதலையான உடனேயே, இந்திய அரசாங்கம் நாடு கடத்த மனு தாக்கல் செய்தது. இந்தியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து ராணா மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
ராணா மீது கொலை, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்திற்குப் பொருந்துகிறது. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியும். இறுதியாக இப்போது டிரம்ப் அதை உறுதி செய்தார்.

இந்தியாவின் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடங்கின. பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் 60 மணி நேரம் பல முக்கிய இடங்களைத் தாக்கினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். காவல்துறை, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில், 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். அவர் பெயர் அஜ்மல் அமீர் கசாப். நவம்பர் 2012-ல் புனேவின் எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி-யின் மனைவிக்கு ஐஎஸ்ஐ-பாகிஸ்தானுடன் தொடர்பு..? அதிர்ச்சியூட்டும் பாஜக..!