சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் லாகூரில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது, ஒரு இளைஞர் இந்தியக் கொடியை அசைத்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த இளைஞனைக் கவனித்தவுடன், பதறி ஓடிப்போய் அவரம் சென்று மூவர்ணக் கொடியைக் கைப்பற்றினர். அத்தோடு அந்த இளைஞனின் காலரைப் பிடித்து மைதானத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மைதானத்தில் ஒரு இளைஞர் இந்தியக் கொடியை அசைப்பது போன்ற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த காணொளி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் வீடியோ என்று கூறப்படுகிறது. அப்போது, ஒரு இளைஞர் இந்தியக் கொடியை அசைப்பதைக் காண முடிந்தது. பாதுகாப்புக் காவலர்கள் அந்த இளைஞரின் சட்டை காலரைப் பிடித்து, கொத்தாக அவரது இருக்கையில் இருந்து தூக்கினார்கள். இதன் பின்னர், தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Jo Dikta Hei Wo Hota Nahi..m
In Lahore Gaddafi stadium, a cricket fan was manhandled by Pakistani security personnel, for waving the Indian flag https://t.co/MoomSkCBVn pic.twitter.com/EgBSxTD7gu
— OsintTV 📺 (@OsintTV) February 24, 2025
முன்னதாக, கராச்சி மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் காணப்பட்டதாகவும், ஆனால் இந்தியக் கொடி காணப்படாததாகவும் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ செய்தி வெளியானது.இந்த விஷயத்தை தெளிவுபடுத்தும் ஒரு வட்டாரம், ''சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா, பாகிஸ்தானுக்கு வரவில்லை. அதனால் மைதானத்தில் இந்தியக் கொடி ஏற்றப்படவில்லை'' என்றும் கூறியிருந்தது. பாகிஸ்தானுக்கு வந்துள்ள அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் மற்ற நாடுகளின் கொடிகளுடன் இந்திய மூவர்ணக் கொடி பாகிஸ்தானின் மைதானத்தில் ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் அணி மீது இனவெறி தாக்குதல்… குரங்குகளுடன் ஒப்பிட்டு வாசிம் அக்ரம் ஆவேசம்..!

பாகிஸ்தான் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது. அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளும் குரூப் ஏ-வில் உள்ளன. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதே நேரத்தில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. இருஅணி இப்போது பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கள் கடைசி முறையான போட்டியை ஒருவருக்கொருவர் எதிர்கொள்வார்கள்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தானில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாதிகள் வைத்த குறி..!