×
 

மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் 2 இளம் வீரர்களை அணிக்கு கொண்டுவர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்களை ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படும் மோசமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஹைடன், ரெய்னா, வாட்சன் ஆகியோர் போன்ற வீரர்கள் விளையாடிய அணியில் தற்போது ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா விஜய் சங்கர் போன்ற வீரர்கள் ஆடி வருகிறார்கள்.

இது சிஎஸ்கே அணியின் விளையாட்டை கெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து அணியின் நலனுக்காக சில மாற்றங்களை செய்யப்போவதாக கூறப்பட்டு வந்தது.  டெல்லிக்கு எதிரான சென்னையில் நடைபெறும் போட்டியில் ருதுராஜ் இந்த மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையையும் மாற்ற வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்றைய ஐபிஎல் போட்டி இப்படி தான் இருக்கும்.. ரகசியத்தை போட்டுடைத்த SRH பயிற்சியாளர்!!

அதன்படி, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கான்வே, சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன் காரணமாக ரச்சின் ரவீந்திரா மூன்றாவது வீரராக விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

அதன்படி இளம் வீரர் சாயிக் ரசித் மற்றும் விக்கெட் கீப்பரான வன்ஷ் பேடி ஆகியோரை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் சிஎஸ்கே அணி அன்சூல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே உள்ளே வந்தால் சாம் கரண் அல்லது ஜிம்மி ஓவர்டன் என இரண்டு வீரர்களுமே வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும் என்பதால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக இந்திய வீரரை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சொந்த மண்ணில் ஆர்.சி.பி-ஐ வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்… வானவேடிக்கை காட்டிய ரூதர்போர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share