×
 

இன்றைய ஐபிஎல் போட்டி இப்படி தான் இருக்கும்.. ரகசியத்தை போட்டுடைத்த SRH பயிற்சியாளர்!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய அட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. சன்ரைசர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இதுவரை 28 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் கொல்கத்தா அணி 19 முறை வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் கடந்த பைனலில் இரு அணிகளுமே மோதிய நிலையில், இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இதனால் அதற்கு பழித்தீர்க்கும் விதமாக சன்ரைசர்ஸ் அணி இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளதால் அதிக ரன்களை குவிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் பவுண்டரி மிகவும் குறைவான தூரத்தில் இருப்பதால் மிக எளிதாக பேட்ஸ்மேன்கள், சிக்சர், பவுண்டரி அடித்து விளாச ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சொந்த மண்ணில் ஆர்.சி.பி-ஐ வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்… வானவேடிக்கை காட்டிய ரூதர்போர்ட்!!

கடந்த இரண்டு போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் இன்றைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர், இன்றைய ஆடுகளம் முகமது சமிக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

எப்போதுமே நல்ல லெங்தில் பந்து வீசுவது தான் இந்த ஆடுகளத்திற்கு சரியான பவுலிங் ஆக இருக்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் அவர் எவ்வாறு பந்து வீசுகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சமி நடப்பு சீசனில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: RR கேப்டனாகிறாரா சஞ்சு சாம்சன்? வெளியான முக்கிய தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share