இனி ஃபுல்டாஸ் பந்துதான்... அஸ்வின் அதிரடி!!
நடப்பு ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அஸ்வினும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதனிடையே ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் இம்பேக்ட் வீரர் மூலம் கூடுதல் பேட்ஸ்மேன்கள் களமிறக்கப்படுகிறார்கள். மேலும் ஸ்டேடியமும் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இதனால் அதிக ரன்கள் கொடுப்பதாக பவுலர்கள் ஒருபக்கம் கவலையில் உள்ளனர். இது குறித்து ஏற்கனவே ரபடா, இதனை கிரிக்கெட் என அழைப்பதற்கு பதில் வெறும் பேட்டர் என அழையுங்கள் என்று கோபமாக கூறியிருந்தார். தற்போது இதுக்குறித்து அஸ்வினும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: RR-ஐ கதறவிட்ட டி காக்… 8 விக்கெட் வித்தியாசத்தில் KKR வெற்றி!!
அவர் பேசுகையில், இனி ஒவ்வொரு பவுலர்களும் தங்களுக்கு என தனியாக மனோதத்துவ மருத்துவர் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நான் உண்மையாகத்தான் சொல்கின்றேன். பவுலர்கள் தற்போது தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாக கூறுகிறீர்கள். ஆனால் தற்போது உள்ள கிரிக்கெட்டில் பந்துவீச்சு என்பது முடியாத காரியமாக மாறிவிட்டது. சில மைதானங்களில் எல்லாம் ஸ்டெம்புகள் எதற்கு இருக்கிறது என தெரியவில்லை. சாய் சுதர்சனுக்கு எதிராக சாகல் ஃபுல் டாஸ் வந்து ஒன்றை வீசினார்.
ஆனால் அதில் வெறும் ஒரு ரன் மட்டும்தான் அடிக்கப்பட்டது. இது ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கின்றேன். ஏனென்றால் சில ஆடுகளங்களில் பந்து வீசும் போது பந்து ஆடுகளத்தில் பட்டு அது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமான பந்தாக மாறுகிறது. இப்படி இருக்கும் போது ஆடுகளத்தில் படாமல் புல் டாஸ் வீசும் போது அதனை பேட்ஸ்மேன்கள் அடிக்க சிரமப்படுகிறார்கள். இளம் வயதில் புல்டாஸ் வீசினால் பேட்ஸ்மேன்கள் அதனை அடித்து விடுவார்கள் என்று சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது வழங்கப்படும் ஆடுகளங்களை பார்க்கும்போது புல்டாஸ் என்பது நல்ல பந்தாக எனக்குத் தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்து... KKR விக்கெட் கீப்பர் செய்த வினோத செயல்!!