×
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. அரையிறுதியில் இந்தியாவை சாய்க்க ஆஸ்திரேலியா வியூகம்... சுழற்பந்து தாக்குதல் நடத்த திட்டம்!

துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் எப்படியும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது. அந்த அணியில் முக்கிய வியூகம் வகுக்கப்பட்டு, மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் கூப்பர் கானோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கூப்பர் கானோலி சுழற் பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு எதிரான வியூகமாக பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி விதிப்படி தொடரின் இடையே 15 வீரர்கள் அடங்கிய உத்தேச அணியில் ஒரு வீரரை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை 15 வீரர்கள் பட்டியலில் சேர்க்க முடியும். இதற்கு ஐசிசியிடம் அனுமதி பெற வேண்டும். காயம் உள்ளிட்ட நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட்டின் பாதத்தில் காயம் ஏற்பட்டது. அவர் தடுமாறி பேட்டிங் செய்து 20 ரன்கள் சேர்த்தார். எனவே, காயம் அடைந்த ஷார்ட்டை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூப்பர் கானோலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேத்யூ ஷார்ட்டின் காயத்தை ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான வியூகமாக பயன்படுத்தி உள்ளது.  ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டியை  துபாய் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா குண்டா இருக்காரு... அவரு கேப்டனாக இருப்பதே அசிங்கம் என்ற பிரபலம்!!

எனவே ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவும் ஆஸ்திரேலிய அணி பகுதி நேர ஸ்பின்னர் கூப்பர் கானோலியைத் தேர்வு செய்துள்ளது. மேலும்  ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜம்பா,  கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மார்னஸ் லாபுஷேன் ஆகியோரும் சுழற் பந்து வீசக்கூடியவர்கள்.  இதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

2023இல் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. அதற்கு பழி வாங்கும் விதத்தில் இந்திய அணி விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியா அபார வெற்றி...மனுஷனா என மிரண்டு பார்த்த நியூசிலாந்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share