இந்தியா அபார வெற்றி...மனுஷனா என மிரண்டு பார்த்த நியூசிலாந்து!!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன் வித்யாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன் வித்யாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது. ஐசிசி சாம்ன்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 12வது ஆட்டத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன். துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். கில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணை சேர்ந்து விளையாடினர். ஆனால் ரோஹித் 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியாக இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்தார். ஹர்த்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
இதையும் படிங்க: கிங் கோலி எண்ட்ரி....ஓபனிங்கே சும்மா அதிருதே!!
நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். ஆனால், அவருடன் எந்த பேட்ஸ்மேனும் இறுதிவரை நிற்காமல் இந்திய வீரர்களின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி பத்து ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் இந்தியா பலமான அணி என்பதை காட்டியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி போட்டிக்கு இதே ஃபார்மில் இந்தியா விளையாடினால் சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவுக்கு தான் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா...7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!!