×
 

ICC Champions Trophy : பத்தல பத்தல 351 ரன்னெல்லாம் பத்தல.. இங்கிலாந்தை அடிச்சி நொறுக்கி ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி.!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றுப் போடியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்றுச் சாதனையுடன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நான்காம் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று இரவு லாகூரில் நடைபெற்றது. ஆஸ்திரிலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழி நடத்தினார். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அந்த அழ்னியில் பென் டக்கெட், 143 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்து அசத்தினார். இது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோராகப் பதிவானது. ஜோ ரூட் 68 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாதது ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் தெரிந்தது.



352 ரன்கள் என்கிற கடினமான இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. ஆனால் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியூட்டினர். என்றாலும் மேத்யூ ஷார்ட் - லபுஷேன் இணை இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. லபுஷேன் 47 ரன்களிலும் ஷார்ட் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், 134 ரன்களுக்கு 4 விக்கெடுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

என்றாளும் 5ஆவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த அலெக்ஸ் கேரி, ஜாஷ் இங்கிலிஸ் இணைந்து 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணியின் வெற்றி கூட்டணியாகவும் அமைந்தது. கேரி 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் இந்திய வீரர்.. வியக்க வைக்கும் உணவுக் கட்டுப்பாடு.!

பின்னர் வந்த மேக்ஸ்வெல் உடன் இணைந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் இங்கிலிஸ். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையிம் அவர் பதிவு செய்தார். மூவரின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இது ஐசிசி நடத்தும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்யப்பட்ட ரன்னாக அமைந்தது. ஜாஷ் இங்கிலிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இத்தொடரில் இன்று நடைபெறும் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதுகின்றன. 

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: சொந்த மண்ணில் பாகிஸ்தானை சாய்த்த நியூசிலாந்து?  வெற்றிக்கு காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share