ஐபிஎல் முதல் மேட்ச்சுக்கு வந்த சிக்கல்... செய்வதறியாது தவிக்கும் பிசிசிஐ!!
2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பிசிசிஐ செய்வதறியாது திணறி வருகிறது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் நாளை முதல் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த போட்டி நடைபெற உள்ள கொல்கத்தா நகரத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இன்று மழை பெய்ததால் இரு அணிகளும் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!!
இதனிடையே மார்ச் 22 (நாளை) மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி துவங்கும் நேரம் ஆன இரவு 7.30 மணிக்கு 45 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது 65 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் முதல் போட்டிக்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமான துவக்க விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் விழா திட்டமிட்டபடி நடைபெறாது கூறப்படுகிறது. இதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனால் ஐபிஎல்-ஐ நடத்தும் பிசிசிஐ செய்வதறியாது திணறி வருகிறது. மேலும் இது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2025: மைதானத்தில் என்னை உற்சாகமூட்டுங்கள்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் கெஞ்சும் ஹர்திக் பாண்ட்யா.!!