×
 

IPL 2025: மைதானத்தில் என்னை உற்சாகமூட்டுங்கள்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் கெஞ்சும் ஹர்திக் பாண்ட்யா.!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு அன்பு கட்டளை ஒன்றை இட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை அணி நிர்வாகம் கடந்த சீசனில் நியமித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை பெற்று தந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது அவருடைய ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மைதானத்திலேயே ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராகவும் ரோஹித் சர்மாவுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் ஹர்திக்கை வறுத்தெடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களின் செயலால் ஹர்திக் டாஸ் போட வந்தபோதும் பேட்டிங் செய்ய வந்தபோதும் ஃபீல்டிங்கில் அவர் பல தவறுகளை செய்தார். அந்த அளவுக்கு ரசிகர்கள் எழுப்பிய எதிர் கோஷம் ஹர்திக் பாண்ட்யாவை தடுமாற வைத்தது. கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களை பாண்ட்யா மறக்கவில்லை போலும். இந்நிலையில் மும்பை ரசிகர்களுக்கு ஹர்திக் பாண்ட்யா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2025: எம்.எஸ்.தோனியின் கடைசி சீசன் எது.? சென்னை ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன ஸ்ரீகாந்த்.!!

இதுதொடர்பாக பாண்ட்யா பேசுகையில், "நான் பேட்டிங் செய்ய வரும்போது எனக்காக உற்சாகக் குரல்களை ரசிகர்கள் எழுப்ப வேண்டும். நான் சிக்ஸ் அடிக்கும்போதும் எனக்காக உற்சாக குரல்களை ரசிகர்கள் அனுப்ப வேண்டும். நான் டாஸ் போட வரும்போது எனக்கு உற்சாகம் ஊட்டுங்கள்.

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்தையும் நான் பார்க்க விரும்பவில்லை. இதுதான் நான் கேட்டுக்கொள்வது" என கூறியுள்ளார்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தன்னை புறக்கணித்ததை மனதில் வைத்தே ஹர்திக் பாண்ட்யா இந்த அன்புக் கோரிக்கையை வைத்துள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இதையும் படிங்க: IPL 2025: வயசானாலும் எம்.எஸ்.தோனியின் ஃபிட்னெஸ்ஸும் ஸ்டைலும் மாறவே இல்லை.. புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share