சாம்பியன்ஸ் டிராபி 2025: எளிய இலக்கை போராடி சேஸ் செய்த இந்திய அணி காரணம் என்ன?
துபையில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எனும் எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருவர் முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் சதம் அடித்த சுப்மான் கில்(101), மற்றொருவர் முகமது ஷமி. இதில் பேட்டிங்கில் தொடக்க வீரராகக் களமிறங்கி கடைசிவரை களத்தில் இருந்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கபப்பட்டார்.
பந்துவீச்சில் பட்டையகிளப்பி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல் வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2து இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன இடத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதல்
வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளையும், பீல்டிங்கை தடுப்படுதிலும் கோட்டைவிட்டனர். வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பவர்ப்ளே முடிவுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம். ஆனால், 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மகிப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் எதிராக அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இந்திய அணி தொடக்கத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தாலும், ஹிர்தாய்-ஜேக்கர் அலி கூட்டணியைப் பிரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.
அக்ஸர் படேலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கைமேல் கிடைக்க வேண்டிய நிலையில் ரோஹித் சர்மா ஸ்லிப்பில் கேட்சை கோட்டைவிட்டார். ரோஹித் சர்மா கோட்டைவிட்ட கேட்சால்தான் ஹிர்தாய்,ஜேக்கர் அலி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. அதேபோல ஒருநாள் போட்டியில் 228 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது. இந்த குறைவான ரன்களை சேஸிங் செய்வதற்கு 44 ஓவர்கள்வரை இழுத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை. குறைவான ரன்களை சேஸிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் நிகரன்ரேட் மிகவும் குறைந்துள்ளது.
மேலும் 2023 உலகக் கோப்பைக்குப்பின், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இந்திய அணி இருந்தது இந்தப் போட்டியில்தான் முதல்முறையாகும். நடுப்பகுதிகளில் விக்கெட் வீழ்த்தாமல் 2002ம் ஆண்டிலிருந்து இந்திய அணி 5வதுமுறையாக இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கே.எல்.ராகுல் தவறவிட்டால் ஜேக்கர் அலி தப்பித்தார். ஜேக்கர் அலி அப்போது 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் நேற்று வழக்கதுக்கும் குறைவாக இருந்தது. அதிலும் ரோஹித் சர்மா 2023ம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டைவிட்டுள்ளார். நியூசிலாந்தின் டாம் லேதம் 11 கேட்சுகளையும் தவறவிட்டிருந்தனர். ரோஹித் சர்மாவின் கேட்ச் பிடிக்கும் சதவீதம்54.55% குறைந்திவிட்டது. 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் சர்மா பிடித்துள்ளார்.
அதேசமயம் விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாரூதின் சாதனையுடன் கோலி சமன் செய்தார். முதலிடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா(218) கேட்சுகளையும் பாண்டிங் 161 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.
பந்துவீச்சில் கடும் போட்டி: இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்து எக்கானமி ரேட்டும் 4.29 ஆக நிர்ணயித்தனர்,ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்னாமி வைத்திருந்தனர்.
அதேசமயம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, ராணா இருவரும் 8 விக்கெட்டுகளைக் கைபற்றின், ஆனால், வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள்26.3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது, 5.88 எக்னாமி வைத்தனர். இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை துபை மைதானம் மந்தமானது எனக் கூறப்பட்டாலும் ரோஹித் சர்மா, சுப்மான் கில் கூட்டணி அருமையான தொடக்கத்தை அளித்தனர்.
பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா(41) விக்கெட்டை இழந்தது.
அனுபவ வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தநிலையில் கவர் திசையில் வந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்பின்னுக்கு கோலி இன்னும் திணறுகிறார் என்பது நேற்று தெளிவாகத் தெரிந்தது. லெக் ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாள்வது, பீல்டிங் இடைவெளிக்குள் தட்டிவிடத் தெரியாமல் தவித்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் (15), அக்ஸர் படேல்(8) ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி 3 விக்கெட்டுகள் 20 ஓவர்களில் 75 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தது.
69 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் விளாசினார். சுப்மான் கில் சதம் அடித்தபோதிலும் அதில் வேகமில்லை, கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதன் சேஸிங் திறன் இன்னும் உத்வேகமெடுக்கவில்லை. 229 ரன்களை 35 ஓவர்களுக்குள் சேஸிங் செய்யாமல் 46 ஓவர்கள்வரை இழத்துவந்தனர். பவர்ப்ளேயில் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்தபோது, வங்கதேசம் அணி 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக ஆடியவங்கதேச பேட்டர்கள் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இந்திய அணியை விட நடுப்பகுதி ஓவர்களில் கூடுதலாக 6 ரன்கல் சேர்த்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இந்திய பேட்டர்களை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டிப்போடட்டனர்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: மகுடம் சூடும் அணிக்கு பரிசுத் தொகையை வெளியிட்ட ஐசிசி