×
 

பால் டேம்பரிங் செய்ததா சிஎஸ்கே..? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குற்றச்சாட்டு..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, பந்தை சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் போது சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, பந்தை சேதப்படுத்தினார் (BALL TAMPERING) என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் எப்படி பரமவைரிகளாக பார்க்கப்படுகின்றனரோ, அதுபோன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும், மும்பை அணியும் பயங்கர எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இதுவரை நடந்து முடிந்துள்ள 17 சீசன்களில் சென்னை அணியும், மும்பை அணியும் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. இந்த 18-வது சீசனில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு, இவ்விரு அணிகள் ஆடிய முதல் ஆட்டத்திலேயே தொற்றிக் கொண்டது.

இதையும் படிங்க: IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பாக இல்லை.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அதிருப்தி.!!

சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரின் முதல்பந்தில் 158 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை அணி முதலில் பந்துவீசும்போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில் பந்துவீச்சாளர் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் கொடுப்பார். அவர் அதனை வாங்கி தனது பாக்கெட்டில் மறைத்துக் கொள்வார். இந்த வீடியோவைத் தான் பால் டேம்பரிங் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள ஆதரவு பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட அணி தான் சிஎஸ்கே. அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்து கோப்பையை வென்றபிறகே அதன்மீதான பார்வை மாறியது. இந்நிலையில் அத்தகையதொரு சிக்கல் மீண்டும் சிஎஸ்கே-வை சூழுமோ என சென்னை ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரணை நடத்துமா? அல்லது வெறுமனே ரசிகர்களின் புலம்புடன் நின்றுவிடுமா என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share