×
 

#IPL2025: AGAIN LOSS...! டெல்லியிடம் படுதோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலபரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தது. 

முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் எடுக்க, கேப்டன் அக்சர் படேல் 21 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களும், அபிஷேக் போரல் 33 ரன்களும், சமீர் ரிஸ் 20 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பாக, கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் , பத்திரனா, ரவீந்திர ஜடேஜா நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மீண்டும் சிஎஸ்கே அணி கேப்டனாகும் தோனி..!

தொடக்கத்தில் இருந்தே கேப்டன் டெவோன் கான்வே (13) , ஜடேஜா (2), ருதுராஜ் (5), ரச்சன் ரவீந்திரா (3), சிவம் துபே (18) ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். தோனியும், விஜய் ஷங்கரும் இறுதி வரை களத்தில் நின்றார்களே தவிர பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. இருவரும் 30 மற்றும் 69 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவரில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. 

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியான மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து டெல்லியிடம் தங்களின் 3வது தொடர் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். 
 

இதையும் படிங்க: மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share