×
 

டெல்லி அணி அபார வெற்றி... லக்னோ அணியை மிரளவிட்ட அஷிதோஷ்!!

லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஜேக் பிரேசர்-மெக்கர்க் விக்கெட்டை வீழ்த்தினார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் போரலை டக் அவுட் ஆக்கினார். அடுத்து மூன்றாவது ஓவரை வீசிய மணிமாறன் சித்தார்த் சமீர் ரிஸ்வி விக்கெட்டை வீழ்த்தினார். இதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதையும் படிங்க: ஐபிஎல்-லில் ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்... DC vs LSG ஆட்டத்தில் தரமான சம்பவம்!!

அக்சர் பட்டேல் 22 ரன்களும், டூ பிளசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்கள் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய விப்ராஜ் நிகம் அதிரடியாக ஆடி இழந்த நம்பிக்கையை மீட்டு தந்தார். அதிரடியாக ஆடி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 15 பந்துகளில் 39 ரன்கள் குவித்த நிலையில் திக்வேஸ் அவரின் விக்கெட்டை  வீழ்த்தினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களிலும் குல்தீப் யாதவ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20வது ஓவரில் களமிறங்கிய மோஹித் தடுமாறிய நிலையில் மறுபுறம் அஷிதோஷ் சர்மா அபாரமாக ஆடி டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். 31 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்து 66 ரன்களை குவித்தார். கடைசி நிமிடம் வரை ஆட்டம் விறுவிறுபாக போன நிலையில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: டெல்லி அணியில் கே.எல்.ராகுல் இல்லாததற்கு இதுதான் காரணம்... குவியும் வாழ்த்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share