×
 

ஐபிஎல்-லில் ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்... DC vs LSG ஆட்டத்தில் தரமான சம்பவம்!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. இதை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஜேக் பிரேசர்-மெக்கர்க் விக்கெட்டை வீழ்த்தினார். ஐந்தாவது பந்தில் அபிஷேக் போரலை டக் அவுட் ஆக்கினார். ஆனால் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது ஷர்துல் தாக்கூர் அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டு  ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடினார்.

இதையும் படிங்க: டெல்லி அணியில் கே.எல்.ராகுல் இல்லாததற்கு இதுதான் காரணம்... குவியும் வாழ்த்து!!

ஆனால் இந்த முறை அவரை முதலில் யாரும் எடுக்கவில்லை. சிஎஸ்கே-வும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனிடையேலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் கடைசி நிமிடத்தில் மொஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது. இவ்வாறு அணைத்து அணிகளால் புறக்கணிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் லக்னோ அணிக்காக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்து கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் அவர் எடுத்துக்கொடுத்த 2 விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது என்று கூறலாம். இதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தன்னை ஏலத்தில் எடுக்காத அனைத்து அணிகளுக்கும் தன் திறமையை காட்டியிருக்கிறார். முக்கிய ஆட்டக்காரர்களான அக்சர் பட்டேல் 22 ரன்களிலும், டூ பிளசிஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share