×
 

ஐபிஎல்லில் 4 வருடங்களுக்கு பின் வந்த சூப்பர் ஓவர்... டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் களமிறங்கினர். அபிஷேக் போரெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் 2 பவுண்டரிகளும் 2வது ஓவரில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சும் அடித்து விளாசினார்.

இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மறுபுறம் மெக்கர்க் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த கருண் நாயர் டக் அவுட் ஆனார். பின்னர் அபிஷேக் போரெல் - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேஎல் ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அபிஷேக் போரெலும் 37 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற, ஸ்டப்ஸ் - அஷுதோஷ் சர்மா கூட்டணி இணைந்து 19வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் குவித்தனர். சந்தீப் சர்மா பந்து வீசிய கடைசி ஓவரில் 4 ஒய்டு, 1 நோ-பால் உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டெல்லி அணி இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

இதை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரியான் பராக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் தொடக்கம் முதலே ராஜஸ்தான் அணி ரன்களை குவிக்க தடுமாறியது. மறுபுறம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து விளாசினார்.

இதையும் படிங்க: சுமாரான இலக்கை எட்டியுள்ள டெல்லி கேபிடல்ஸ்... வெற்றி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

37 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் ரானா கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதிஷ் ரானா 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 31 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் கொடுத்து வெளியேறினார்.

இதை அடுத்து வந்த துருவ் ஜுரேல் மற்றும் ஹெட்மயர் பொறுமையாக ஆடி வெற்றி இலக்கை நோக்கி அணியை அழைத்து சென்றனர். ஜுரேல் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். ஹெட்மயர் 9 பந்துகளில் 15 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இரு அணிகளும் சமமான ரன்களை குவித்ததால் தற்போது இந்த ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐபில் தொடரில் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு வரும் இந்த சூப்பர் ஓவரில், ராஜஸ்தான் அணியின் ஹெட்மயரும் பராக்கும் பேட்டிங் செய்தனர். இதில் 2வது பந்தில் ஹெட்மயர் 4 அடித்தார். அதேபோல் 4 வது பந்தில் பராக் ஒரு 4 அடித்தார். அந்த பால் நோ-பால் ஆனதை தொடர்ந்து ஃபிரிஹிட் கொடுக்கப்பட்டது. அந்த பந்தை பராக் அடிக்க முயன்று 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுபுறம் ஸ்டார்க் வீசிய பந்தை ஹெட்மயர் அடித்துவிட்டு ரன் ஓட முயன்ற போது எதிரே களமிறங்கிய ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.

இதனால் ராஜஸ்தான் அணி 5 பந்துகளில் 10 ரன்கள் குவித்தது. 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் களமிறங்கினர். கே.எல்.ராகுல் முதல் பந்தில் 2 ரன்களும் 2வது பந்தில் 4 அடித்தார். 3வது பந்தில் ஒரு சிங்கில் மட்டுமே சென்றது. 4வது பந்தில் ஸ்டப்ஸ் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதன் மூலம் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க: இவருக்கு 9 கோடியா..? ஆள மாத்துங்க.. டெல்லி அணியின் மெக்கர்கை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share